பாதி இரவு கடந்துவிட்டது


Author: அமிதபா பக்சி

Pages: 0

Year: 2021

Price:
Sale priceRs. 450.00

Description

சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமான இந்தியச் சமூக அமைப்பினுள் இயல்பாகப் பயணிக்கும் இந்நாவல், அன்பு, விசுவாசம், துரோகம் போன்ற ஒன்றுக்கொன்று முரண்பட்ட உணர்வுகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்தஸ்த்தில் வேறுபட்ட இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த மூன்று தலைமுறையினரின் வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டு, தந்தையர் மகன்களுக்கு விட்டுச் செல்கிற மரபுகள் மற்றும் சொத்துக்களையொட்டி தன் எல்லைகளை விரிவாக்கிக் கொள்கிறது. டெல்லியின் செழிப்புமிக்க இல்லம் ஒன்றில், லாலா மோதிசந்தின் மகன்களும் வேலையாட்களும் ஒருவருக்கொருவர் துணையாயிருக்கிற அதே அளவிற்கு ஒருவருகெதிரே மற்றவர் சதியாலோசனைகளிலும் ஈடுபடுகின்றனர். அடிப்படையில் இந்நூல் ஆண்களது வாழ்வை மையமாய்க் கொண்டிருந்தாலும், பெண் கதாபாத்திரங்களின் பங்கும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாதது. அவர்கள் சூதும் சாமர்த்தியமும் புத்திகூர்மையும் உடையவர்கள் மட்டுமல்ல. காதலால் உருகுகிறவர்களும் கூட. அத்துமீறுகிறவர்களை என்ன செய்ய வேண்டும் என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரிகிறது. இதற்கு மத்தியில் இந்திய அரசியலின் ஏற்றத் தாழ்வுகளும் ஆதிக்க அரசியலின் குறியீடாக மாறிவிட்ட ராம் என்கிற பெயர் மீது எளிய மக்கள் கொண்டிருக்கிற உணர்வு ரீதியான பிணைப்பும் இணைகோடாகத் தொடர்ந்து வருகிறது.

You may also like

Recently viewed