கயர்லாஞ்சி: படுகொலையும் அநீதியும்


Author: ஆனந்த் தெல்தும்ப்டே

Pages: 0

Year: 2021

Price:
Sale priceRs. 300.00

Description

இந்துப் பண்பாடு, முழு அண்டமும் ஒரு குடும்பம் என்ற மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே சமூகத்தை எண்ணற்ற சாதிகளாகத் துண்டாக்கியுள்ளது. இந்தப் பண்பாடு அகிம்சையை விழுமியமாகக் கற்பித்துக் கொண்டே, கருவி ஏந்திய கடவுள்களின் வழிபாட்டின் மூலமாகத் தன்னைத்தான் ஒழுங்கு செய்து கொள்ளும் வன்முறையை அன்றாட வாழ்வில் உறுதி செய்கிறது. நாம் கயர்லாஞ்சியை விரும்பத்தக்கதொரு நிகழ்வாக, ஒரு பிறழ்ச்சியாக, ஏதாவது ஒரு குழப்பமான நீதிமன்றத்தில் ஒரு மறந்து போன வழக்காக நீடிப்பதை அனுமதிக்க முடியாது. சாதிய மரம் புறம் தந்துள்ள இந்த விசித்திரக் கனியை உலகம் அறிய வேண்டும். அந்த மரம் தனது இலைகளிலும் வேரிலும் குருதி தோய்ந்து இருப்பதாகும். இந்நூல் எரியும் தசைகளின் திடீர் வாடையை உலகுக்கு அறிமுகப்படுத்துகிறது. இது ஒரு மாறுபட்ட, கசப்பான வழித் தடத்திற்குள் உங்களை அழைத்துச் செல்கிறது. கயர்லாஞ்சியில் இந்திய இந்துமத ஜாதிய சமூகம் நிகழ்த்தியப் பச்சைப் படுகொலையை உலக அரங்கில் விவாதம் எழுப்பச் செய்த தனித்துவமிக்க ஆவணப் பிரதி இது. - இந்நூலின் ஆங்கில பதிப்பிற்கான முன்னுரையில் ஆனந்த் டெல்டும்டே

You may also like

Recently viewed