டாக்டர் க.வெங்கடேசன்

நவீன கால இந்திய வரலாறு

வர்த்தமானன் பதிப்பகம்

 300.00

In stock

SKU: 1000000031535_ Category:
Author

Imprint

Format

Paperback

Pages

360

Year Published

2017

IAS, IPS, IFS, IRS, IES ஆகிய இந்திய ஆட்சிப்பணியாளர் தேர்வுகளுக்கும், தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கும், மற்றுமுள்ள அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் பயன் தரும் அருமையான நூல் இது. இதில், நூலாசிரியர் பேராசிரியர் டாக்டர் க.வெங்கடேசன் நவீன கால இந்திய வரலாற்றை அப்படியே கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார். ஆங்கில கம்பெனி இந்தியாவுக்கு வந்து, வர்த்தகம் செய்து குடியிருப்புகளை அமைத்து, பிற ஐரோப்பிய வர்த்தகக் கம்பெனிகளுடன் போட்டி போட்டு, இறுதியில் இந்தியாவை அக்கம்பெனியின் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்ததே இடைக்கால இந்தியா, நவீன இந்தியாவாக உருமாற்றமடையக் காரணமாக இருந்தது, என்று தொடங்கி நவீன கால இந்திய வரலாற்றை பாங்குடன் விளக்குகிறார் இந்நூலாசிரியர். அந்த வகையில் இந்த நூல் ஒரு நூற்றாண்டு கால (1757-1857) இந்திய வரலாற்றை படம் பிடித்து காட்டுகிறது. இந்த நூல் மேற்கண்ட போட்டித் தேர்வுகளை மனதில் கொண்டு எழுதப்பட்டது. எனவே தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் இந்நூல் ஓர் வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். தமிழ் வாசிக்கக் கிடைக்காத அறிய, அற்புத நூல் இது. நழுவ விடாதீர்கள்.