தகவல் பெறும் உரிமைச் சட்டம் - 2005ம், பொதுத் தகவல் அலுவலரின் கடமைகளும்


Author: வடகரை செல்வராஜ்

Pages: 648

Year: NA

Price:
Sale priceRs. 550.00

Description

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் எந்தத் தகவலை வேண்டுமானாலும் அரசுத்துறைகளிடமிருந்து கேட்டுப் பெற முடியும் என்ற நம்பிக்கை பொதுவாக உள்ளது. ஆனால் உண்மையில் எல்லாத் தகவல்களையும் நாம் பெற முடியாது என்பதை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. தகவலைத் தரும் நிர்வாக அமைப்புகள் குறித்த விரிவான தகவல்கள் இந்நூலில் அடங்கியுள்ளன. தகவல் பெறும் உரிமைச் சட்டம் தோன்றியதன் பின்னணி, அதன் வரலாறு, அச்சட்டத்தின் முக்கிய அம்சங்கள் ஆகியன தொடர்பான விவரங்கள் கூறப்பட்டுள்ளன. தகவல் பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணம் முதற்கொண்டு, தகவல்களைப் பெறுவதற்கான பல்வேறு கட்டணங்கள் குறித்தும் தெரிந்து கொள்ள முடிகிறது.

வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் தகவல் பெறுவதற்கு எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. இவ்வாறு, பலருக்கும் தெரியாத, எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய பல அரிய தகவல்கள் இந்நூலில் அடங்கியுள்ளன. தகவல் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு, வேண்டிய தகவல்களைத் தரும் துறைகளின் பல்வேறு நிலைகளிலான அதிகாரிகள் குறித்த விவரங்கள், இச்சட்டம் தொடர்பாக போடப்பட்ட பல வழக்குகள், அவற்றுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் என நூல் முழுவதும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கிறது.

You may also like

Recently viewed