நமது கடவுள் மனிதனே


Author: சுவாமி விவேகானந்தர்

Pages: 332

Year: 2023

Price:
Sale priceRs. 300.00

Description

சுவாமி விவேகானந்தர் பன்முகச் சிந்தனை கொண்டவர். இருப் பினும் அவரின் உரத்த ஆன்மிகச் சிந்தனைகளே அவரை நமக்கு அடையாளப்படுத்துகின்றன. அவர் ஒரு ஆன்மிகச் சீர்திருத்தவாதி. ஒன்றுக்கும் உதவாத பாரம்பரிய மதப் பழக்கவழக்கங்களையும் இந்திய மக்களின் மனத்தில் ஊறிப்போன, நைந்துபோன மூட நம்பிக்கை களையும் அவர் ஆன்மிகம் என்று ஏற்றுக்கொள்ளவில்லை.

அவர், இராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, பதஞ்சலி யோக சூத்திரம் போன்ற சமய சாத்திரங்களைத் தன் எழுத்துக்களில், சொற்பொழிவுகளில் மேற்கோள் காட்டியிருந்தாலும் அவரின் ஆழ் மனத்தில், ஆணித்தரமாக வேரூன்றிய, உலகத்திற்குத் தான் சொல்ல விரும்பிய புரட்சிகரமான ஆன்மிகச் சிந்தனைகள் மட்டுமே இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

2013ல் சென்னை, மயிலாப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திலிருந்து 'விவேகானந்தரின் வீர மொழிகள்' என்ற தலைப்பில் 11 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ள நூல்களிலிருந்தே இந்த நூல் தொகுக்கப் பட்டுள்ளது. அத்திருமடத்தின் தலைவர் ஸ்ரீமத் கௌதமானந்த மகராஜ் அவர்களுக்கும் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் அவர் களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கருத்துப்பிழை ஏற்படக் கூடாது என்பதற்காக, அந்தத் தொகுதி களில் உள்ள சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள் அப்படியே சொல் மாற்றாமல் எடுத்தாளப்பட்டுள்ளது. எந்தத் தொகுதியின் எந்தப் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது என்பதைக் குறிக்க, அந்தந்தப் பத்தியின் இறுதியில் (உதாரணமாக, 5:487 என்றால் ஐந்தாம் தொகுதி 487வதுபக்கம்) தொகுதிமற்றும்பக்கஎண்ணும்கொடுக்கப்பட்டுள்ளது. பத்திகளின் ஆரம்பத்தில் உள்ள சிறு தலைப்புகளும் 25 கட்டுரைகளின் தலைப்புகளும் தொகுப் பாளனால் கொடுக்கப்பட்டது.

உண்மை ஆன்மிகத்தையும், விவேகானந்தரின் உள்ளார்ந்த விருப் பத்தையும் அறிந்து கொள்ள இந்நூல் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை.

-ஐாநிசிவம்

You may also like

Recently viewed