யதி : தத்துவத்தில் கனிதல்

தன்னறம் நூல்வெளி

 500.00

Format

Hardcover

Imprint

Year Published

2021

மெய்ஞான முன்னோடிகளான நாராயணகுரு மற்றும் நடராஜகுரு ஆகியோர்களின் தத்ததுவமரபுத் தொடர்ச்சியின் நீட்சியாகத் தனது ஊழ்கத்தில் நின்றுதித்த குரு நித்ய சைதன்ய யதி அவர்கள் எழுதிய கட்டுரைகள் மற்றும் அனுபவக் குறிப்புகளின் தொகுப்பு  இப்புத்தகம். தத்துவதரிசனம் குறித்தும் தான் நம்பியுணர்ந்த உண்மைகளை அறிவுச்செறிவான மொழிநடையில் யதி எடுத்துரைக்கும் புத்தகமாக இந்நூல் அமைந்து இருக்கிறது

எழுத்தாளர்கள் ஜெயமோகன், நிர்மால்யா, பாவண்ணன், சூத்ரதாரி ஆகிய முதன்மைப்படைப்பாளிகள் மொழிபெர்த்துத் தொகுத்த செறிவடர்ந்த கட்டுரைகள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது . மெய்ஞானத் தத்துவத்தை அதற்கேயுரிய தெளிவோடும் ஆழ்ந்த எளிமையோடும் விளக்கும் அறிந்துணர்தலின் கதையென இந்நூல், நம் அகவெளியின் நிகர்தெய்வத்தை அறிவதற்கான எழுத்துப்படைப்பாக தமிழடைந்து வெளிமந்துள்ளது.