கானா பிரபா

SPB பாடகன் சங்கதி

அகநாழிகை

 500.00

Author

format

Year Published

2022

Imprint

தமிழ்நாட்டிலிருந்து தொலைதூரத்தில் இருந்தாலும் தமிழ்த் திரை இசைக்கு மிகவும் பக்கத்தில் இருப்பவர் என் இனிய நண்பரான கானா பிரபா. தமிழிலே வெளியான பெரும்பாலான திரைப்பாடல்களைப் பற்றிய முழுமையானத் தகவல்களைத் தன்னுடைய மனதிலே இவரால் பதிந்து வைத்திருக்க முடிகிறது என்றால் அதற்கு அடிநாதமாக இருப்பது தமிழ்த் திரைப்பாடல்கள் மீது இவருக்குள்ள அளவில்லாத காதல்தான். இசையின் காதலனான கானா பிரபாவிற்கு எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மீது இருக்கும் காதலின் பிரதிபலிப்புதான் இந்த ‘SPB பாடகன் சங்கதி’ என்ற நூல். எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு அன்றாடம் பழகியவர்கள் கூட இப்படி ஒரு நூலை எழுதியிருக்க முடியாது என்று கூறத்தக்க அளவில் பல புதுப்புது தகவல்கள் இந்த நூலிலே இருக்கின்றன. எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற அந்த மகா கலைஞனுக்கு காலத்தைக் கடந்து நினைவிலே நிற்கக் கூடிய அருமையான பதிவுகள் மூலம் அஞ்சலி செலுத்தியுள்ள கானா பிரபாவிற்கு வாழ்த்துகள்.

– சித்ரா லட்சுமணன், திரைப்படக் கலைஞர்