சைவ சமயத்தில் மொழிப் போர்


Author: செளந்திர.சொக்கலிங்கம்

Pages: 0

Year: 2021

Price:
Sale priceRs. 500.00

Description

ஒவ்வொரு சைவரிடமும் இருக்க வேண்டிய நூல்

பாரத தேசத்தின் இணைப்பு மொழி வடமொழியாகிய சம்ஸ்கிருதமே! அதனால் இங்கு தோன்றிய சமயங்கள் தம் ஆதார நூல்களை சம்ஸ்கிருதத்திலும் வழிநூல்களை மாநில மொழிகளிலும் உருவாக்கின. வேதவழிப்பட்ட சமயங்களான சைவமும், வைணவமும் அப்படியே, சமணம், பௌத்தமும் விதிவிலக்கில்லை.

இந்த உண்மைகளை மறைத்து, தமிழே சைவத்தின் மொழி என, கடந்த 150 ஆண்டுகளாக ஒரு சாரார், பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கு ஆதாரமாக பழைய நூல்களின் பொருளைத் திரித்தும் தங்கள் கற்பனைக் கருதுகோள்களின் அடிப்படையில் நூல்களைப் படைத்தும் உலவ விட்டனர்; விடுகின்றனர்.

முதல் 1960ம் ஆண்டு வரையிலான 20 ஆண்டுக் காலத்தில் அவர்களைக் கண்டித்து, சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பின்னையவர்கள் எழுதிய நூல்கள், கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்

1940 .

மொழிவெறியால் சைவம் மட்டுமே பாதிக்கப்பட்டது. அரசியல் தளத்தில் தோன்றிய பிரிவினைக் கிளர்ச்சி, சமயத் தளத்துக்கு கடத்தப்பட்டது ஏன்? அதன் அரசியல் பின்னணி என்ன? மொழிவெறியைத் தூண்டி விட்டவர்களின் நோக்கம் என்ன? மொழிப்போரால் பயனடைந்தவர்கள் யார்? வீழ்ந்தவர்கள் யார்? முழுவதுமாக அறிய இந்நூலைப் படியுங்கள்!

கணபதி சுப்ரமணிய சிவாச்சார்யார், M.Com., CA (Inter)

You may also like

Recently viewed