Author: பேரா.க.மணி

Pages: 488

Year: NA

Price:
Sale priceRs. 600.00

Description

பகவத்கீதைக்கு ஸ்ரீ சங்கரரின் பாஷ்யம் விளக்க உரை அத்வைத வேதாந்த நெறியில் உள்ளது.
அந்த அத்வைத நெறி பிறழாமல் காப்பாற்றி நம்மிடம் வழங்கிய மகான்களில் பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதியும் சுவாமி குருபரானந்தரும் அடங்குவர்.
இவர்களே போதனை நெறி சங்கிலித் தொடரின் அண்மையில் உள்ள கண்ணிகள்.
அத்வைதநெறி மீறிய விளக்கங்களால் ஒரு பயனும் இல்லை.
நான்-உலகம் என்கிற துவைத பா4வமே பந்தம்.
நானே பிரம்மம் ஜகத்காரணம் என்கிற தெளிந்த அத்வைத ஞானமே முக்தி.
பகவத் கீதை முக்திக்கான நெறியைப் புகட்டும் ஸ்மிருதி.
எனவே அத்வைதம் மீறிய நெறிகளால் பயனில்லை எனப்பட்டது.
கீதா ஸாரம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்நூல் நீண்ட விளக்க உரை அல்ல, விளக்கவுரைகளை அத்வைத நெறிப்படி விளங்கிக்கொள்ள உதவும் ரத்தின சுருக்கமான கைநூல்.
பகவானது உபதேசங்களில் உள்புகுந்து தேடிக் கண்டுபிடித்துத் திரட்டிய மணிப்பரல்கள், அத்தியாய வரிசைப்படிக் கோத்து மாலையாக்கப்பட்ட நூல்.
இந்த நூலின் நோக்கம் பகவத்கீதையின் உரைகளை விளங்கிக்கொள்ள உதவி செய்வது.
உபதேசத்தின் எல்லா நுணுக்கங்களும் ஒன்றுவிடாமல் அறிந்து கொள்ளப்பட்டதா என்பதைச் சரி பார்த்துக் கொள்ள உதவும் செக்லிஸ்ட்.
இரண்டற்ற ஒன்றான பரமாத்மாவே நான் என்று அறிந்துகொள்ள உதவும் சாதனமாகிய ஞானத்தையும் அதைப்பெறத் தகுதியுடைய மனத்தையும் நல்கும் பகவத் கீதையின் ஸாரம் இந்த நூல்.

You may also like

Recently viewed