என்னிடம் வந்துசேர்ந்த கதைகள் உங்கள் கதைகளாகவும் இருக்கலாம்


Author: வழக்கறிஞர் பா. பழனிராஜ்

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 115.00

Description

எப்படிப் பகுப்பது எப்படித் தொகுப்பது என்று அறிந்தவர்கள் தானே நன்கு வாதாடவும் வழக்காடவும் முடியும். திரு.பழனிராஜ் இந்த நூலை மிகச் சரியாக மூன்றாகப் பகுத்து அந்தந்தப் பகுதியின் திறந்த கதவுகளின் வழியாக வந்து இவரைப் பார்த்தவர்களையும், இவர் போய்ப் பார்த்தவர்களையும் பதிவு செய்திருக்கிறார். பார்த்தால் என்ன, பார்க்கப்பட்டால் என்ன, இரண்டு புறமுமே மனிதர்கள் தானே. மனிதர்களை மிகக் குறைந்த கோடுகளில் மிக அசலாக வரைகிற ஒரு எளிய, உண்மையான மொழி இவரிடம். இரண்டாம் பகுதி மனிதர்கள் முதல் பகுதி மனிதர்களைவிட உயிர்ப்பானவர்கள்.

மூன்றாம் பகுதி வேறொரு தளத்தில், முதுமையும் முதிர்ச்சியும் சார்ந்தவை. வாழ்க்கையில் எந்தத் தருணமும் தாமதமானதல்ல என்று சொல்பவை. வாசிப்பு, நடைப் பயிற்சி பற்றிய குறிப்புகளையும் விட, ‘வழக்கறிஞரின் ஒரு நாள் டைரி’ என்பது ஒரு மிக அழகான சித்திரம்.

கல்யாண்ஜி

You may also like

Recently viewed