பனையபுரம் அதியமான்

அயல்நாடுகளில் அற்புத ஆலயங்கள்

வானதி பதிப்பகம்

 250.00

SKU: 1000000033351_ Category:
Author

Pages

328

format

Imprint

இலங்கையில் உள்ள மாணிக்க விநாயகர், திருகோணேஸ்வரர், கேத்தீச்சரம், நகுலேஸ்வரம், முன்னேஸ்வரர், மாவிட்டபுரம், கதிர்காமம், நல்லூர், நயினாதீவு நாகபூஷணி, சீதை அம்மன், அனுமன் பாதம் பதித்த ரம்போடா, செல்வ சந்நிதியான், ஸ்ரீவில்லிபுரம் ஆழ்வார் கோயில்; மலேசியாவில் உள்ள கோர்ட்டுமலை கணேசன், மகாமாரியம்மன், கோலாலம்பூர் மகா மாரியம்மன், பினாங்கு கொடிமலை முருகன், ஈப்போ மகாமாரியம்மன், கல்லுமலை முருகன்; சிங்கப்பூரில் உள்ள லயன் சித்தி விநாயகர், தண்டாயுதபாணி, வீரமாகாளியம்மன்; சுவிட்சர்லாந்தில் உள்ள செங்காலன் கதிர்வேலாயுதன், ஞானலிங்கேச்சுரர், பேர்ன் கல்யாண சுப்பிரமணியன், ஜெர்மனியில் உள்ள குறிஞ்சிக் குமரன் உள்பட 30 கோயில்களைப் பற்றிய சுவாரசியமான வரலாற்றுத் தகவல்களைக் கொண்டது இந்நூல்.
கோயிலின் அமைவிடம், உருவான விதம், புராண வரலாறு, ஆலயச் சிறப்பு, விழாக்கள், தொன்மைச் சிறப்பு, அத்திருத்தலத்தைப் பாடியோர் விவரம், இலக்கியங்களில் உள்ள குறிப்புகள், தங்குமிட வசதி, தரிசன நேரம் என எல்லாவற்றையும் பதிவு செய்திருப்பது சிறப்பு. நூலாசிரியரே நேரில் சென்று, கண்ட அனுபவத்தின் துணையோடும், பல்வேறு சான்றுகளோடும், புகைப்படங்களுடனும் பதிவு செய்திருப்பதுதான் நூலின் தனிச்சிறப்பு.