ஜெயமோகன்

கல்பொருசிறுநுரை – செம்பதிப்பு-25

விஷ்ணுபுரம் பதிப்பகம்

 1,300.00

In stock

SKU: 1000000033874_ Category:
Author

Imprint

Pages

848

format

Year Published

2022

கிருஷ்ணனின் மறைவுவரை செல்லும்  இந்நாவல், கல்பொருசிறுநுரை. இந்த இருபத்திரண்டாயிரம் பக்கங்களில் திரட்டி எடுக்கப்பட்ட பேராளுமை. அவன் சொல்லே, இந்நாவலின் சுடர். ஆனால் அவனுடைய குலச்சரிவை, குடியழிவை, நகர்மறைவை, அவன் அகல்வை புராணங்கள் சொல்லத்தான் செய்கின்றன. அது ஊழ் என்பதனால், பிரம்மவடிவானவனும் அதற்கு கட்டுப்பட்டவனே என்பதனால். மகாபாரதம் சொல்லும் நெறிகளில் முதன்மையானது என்னவென்றால் இங்குள்ள ஒவ்வொன்றும் ஒரு  துலாத்தட்டில் உள்ளன என்பதே. ஒன்று பிறிதொன்றை நிலைநிறுத்துகிறது, ஒன்றின் நிலையழிவு பிறிதொன்றை நிலையழியச் செய்கிறது.
மகாபாரதப் பெரும்போரில் மாபெரும் குடியழிவை உருவாக்கியவன் அதற்கான விலையை தான் கொடுப்பதன் சித்திரம் இது. கொடுக்கவேண்டுமென அவன் அறிந்திருந்தான், அவனே அதை தரிசனம் என முன்வைத்தவன். ஆகவே அவன் அதை அளித்தான். அவன் கண்முன் மறைந்தன எல்லாம். அவன் துயருற்றிருப்பானா? துயர் அவனுக்கு உண்டா? இருந்திருக்கலாம், பெருந்தந்தையர் துயர்கொண்டவர்கள். ஆனால் அவன் அதற்கும் அப்பால். துளிகளை, அலையை கடலை மட்டுமல்ல புவியை ஒரு துளியெனக் காணும் தொலைவு திகழும் பார்வை கொண்டவன். அவனுக்கு கல்பொருசிறுநுரைக் குமிழிதான் அவனேகூட.