கே.ஜி.ஜவஹர்லால்

ஸ்ட்ரெஸ்ஸுடன் ஜாலியாக வாழ்வோம்

சுவாசம்

 160.00

SKU: 1000000033965_ Category:
Author

format

Year Published

2022

Imprint

ஸ்ட்ரெஸ், அதாவது மன அழுத்தம், ஏன் ஒருவர் ஸ்ட்ரெஸ்ஸுடன் ஜாலியாக வாழவேண்டும்? அந்த ஸ்ட்ரெஸ் இல்லாவிட்டால் இன்னும் ஜாலியாக வாழலாமே? கொரோனா வந்தபோது அதை எதிர்த்துப் பார்த்து, இரண்டே மாதங்களில் எல்லாரும் சொல்ல ஆரம்பித்தார்கள். ‘கொரோனாவுடன் வாழப் பழகவேண்டும்’ என்று. ஸ்ட்ரெஸ்ஸும் அப்படித்தான். மன அழுத்தம் இல்லாத ஒரு வாழ்க்கை என்பது கற்பனையில் மட்டுமே சாத்தியம், அதனால், அதனுடனேயே வாழப் பழகுவது நல்லது. அதுமட்டுமல்ல. ஸ்ட்ரெஸ்ஸே இல்லாவிட்டால் எந்த வேலையையும் திருப்திகரமாய்ச் செய்ய முடியாது. ஒரு வகையில், அளவுக்குட்பட்ட ஸ்ட்ரெஸ் என்பது ஓர் இயக்குவிசை. ஸ்ட்ரெஸ் தொடர்பான அனைத்து விஷயங்களையும் நகைச்சுவை ததும்ப, சுவாரஸ்யமாக, எளிய உதாரணங்கள் மூலமும், சிரிப்பை வரவழைக்கும் கதைகள் மூலமும் விளக்கி இருக்கிறார் கே.ஜி.ஜவர்லால், ஸ்ட்ரெஸ்ஸை நீக்குவதற்கான எளிய பயிற்சிகளையும் விளக்கி இருக்கிறார். இன்றைய ஸ்ட்ரெஸ் உலகத்தில், அது தொடர்பான கடினமான ஒரு புத்தகத்தைப் படிப்பதுகூட நம் ஸ்ட்ரெஸ்ஸைக் கூட்டிவிடக் கூடும்! அப்படி ஒரு வாய்ப்புக்கே வழி இன்றி, இலகுவான நடையில் சுவாரஸ்யமாக இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார் நூலாசிரியர்,