ரிச்சர்ட் டெம்ப்லர்

காதல் விதிகள்

கிழக்கு

 150.00

Out of stock

SKU: 9788131732069_ Category:
Title(Eng)

The Rules of Love

Author

Pages

229

Year Published

2009

Format

Paperback

Imprint

ஆதாம், ஏவாள் காலம் முதல் மனிதனை சுழற்றியடிக்கும் ஒரு மந்திர சக்தி, காதல். காதல்தான் பல சாம்ராஜ்ஜியங்களை அழித்திருக்கிறது. ஆனால் அதே காதல்தான் பல சாதாரண மனிதர்களை சாதனையாளராக உயர்த்துவதற்கும் தூண்டுகோலாக இருந்திருக்கிறது. உலக இலக்கியங்கள் காதலைத்தான் கொண்டாடி மகிழ்ந்துள்ளன. காதல் மட்டும் இல்லாமல் போனால் இந்த உலகம் எப்போதோ அழிந்து போயிருக்கும் என்பது எல்லோரும் ஒப்புக்கொள்ளக்கூடிய வாசகமாக இருக்கிறது.ஆனால் படிப்பில், பொது அறிவில் கெட்டிக்காரர்களாக இருப்பவர்கள்கூட காதல் என்று வந்துவிட்டால் எல்.கே.ஜி ஸ்டூடண்ட் ஆகிவிடுகிறார்கள். ஆம். காதலை வெல்வதும், அடைவதும் அத்தனை சுலபமல்ல. மனிதனுக்குக் காதல் உணர்வு மட்டும்தான் சுலபமாக வருகிறது. ஆனால் காதலை தன் வசப்படுத்துவது என்பது இன்றுவரை பலருக்கு எட்டாத நிலவு. பலபேர் “ஐ லவ் யூ”வை பரிட்சைபோல பலமுறை முயற்சி செய்து பார்த்தாலும் இறுதியில் தோல்வியையே அடைகிறார்கள். காதல் திருமணங்கள் அதிகமாகி வருகிற நம் நாட்டில்தான் காதல் தற்கொலைகளும் அதிகம் ஏற்படுகின்றன. ஏன் இந்த நிலை? இதை மாற்ற என்ன செய்யவேண்டும்?நம் அணுகுமுறையில், குணத்தில், நடத்தையில் சிறு மாற்றங்களைக் கொண்டுவந்தாலே போதும்; காதல் பூங்கொத்து நம் கையில் என்று அடித்துச் சொல்கிறது இந்தப் புத்தகம். இதன் ஒவ்வொரு அத்தியாயமும் காதலை வெற்றிகொள்ள ஒரு படிக்கல். இனி காதலும் காதலியும் உங்கள் உள்ளங்கையில். ஆல் தி பெஸ்ட்!