என். சொக்கன்

குஷ்வந்த்சிங் – வாழ்வெல்லாம் புன்னகை

கிழக்கு

 60.00

Out of stock

SKU: 9788183680264_ Category:
Title(Eng)

Kushwant Singh – Vazhvellam Punnagai

Author

Pages

144

Year Published

2006

Format

Paperback

Imprint

செக்ஸ் எழுத்தாளர், கிசுகிசுப் பிரியர், விஸ்கி முன்னேற்றக் கழகத்தின் தலைவர், பாகிஸ்தான் வெறியர் – இப்படியெல்லாம் அவரை விமரிசனம் செய்தாலும் இந்திய ஆங்கில எழுத்தாளர்களுள் தவிர்க்க முடியாதவர், குஷ்வந்த் சிங். நாவல் எழுதினாலும் சரி, நான்கு வரி எழுதினாலும் சரி, எழுதுவதை சுவாரசியமாக எழுத வேண்டும் என்ற கொள்கை உடையவர். எழுதத் தொடங்கிய காலத்தில் நாவலாசிரியராக, மொழிபெயர்ப்பாளராக, சிறுகதை எழுத்தாளராக அறியப்பட்டாலும், பத்திரிகையாசிரியராக அவருடைய பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஐம்பதாயிரம் பிரதிகள் விற்றுக் கொண்டிருந்த ஒரு பத்திரிகைக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று, தன்னுடைய பங்களிப்பால் விற்பனையைப் பல லட்சங்களில் உயர்த்திக் காட்டியவர். வாழ்வில் கடும் நெருக்கடி நேர்ந்த சமயங்களில் எல்லாம் கூட புன்னகையுடன் அவற்றை எதிர்கொண்ட குஷ்வந்த் சிங்கின் அந்த இயல்புதான் அவர் எழுத்தின் நரந்தர இளமைக்குக் காரணமாக இருக்கிறது. ஓர் எழுத்தாளரின் வாழ்க்கை வரலாறில் என்ன பெரிய சுவாரசியம் இருந்துவிடமுடியும் என்று குஷ்வந்த் சிங்கைப் பொறுத்தவரை கேட்கவே முடியாது. ஒரு முழுநீளத் திரைப்படமே சாத்தியம்! Sex writer, lover of gossips, president of whiskey development party, seriously pro-Pakintani