பா.ராகவன்

நிலமெல்லாம் ரத்தம்

 800.00

Out of stock

SKU: 9788183680905_ Category:
Title(Eng)

Nilamellam Raththam

Author

இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்திக்க நேர்ந்த மிகப்பெரிய சிக்கல், இஸ்ரேல்-பாலஸ்தீன் தொடர்பானது. தனித்துவம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அரசியல்வாதிகளால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட மக்களின் உணர்வு சார்ந்ததொரு பிரச்னை. இன்றுவரை இது தீர்க்கப்பட முடியாமல் இழுத்துச் செல்வதன் காரணம் என்ன? பாலஸ்தீன் சுதந்தரத்துக்கான போராட்டத்தில் லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். வீடிழந்து, சொத்திழந்து, சொந்தங்களை இழந்து பல்லாண்டுகளாக அகதிகளாக இன்னமும் அலைந்து திரிந்துகொண்டிருக்கிறார்கள், பாலஸ்தீன் அரேபியர்கள். வளமையும் செழுமையும் மிக்க மத்தியக்கிழக்கு தேசங்கள் எது ஒன்றுமே ஏன் இவர்களுக்கு உதவ முன்வரவில்லை? ஒதுங்க ஓர் இடம் இல்லாமல் உலகெங்கும் உயிருக்கு அஞ்சி ஓடியவர்கள் யூதர்கள். அப்படிப்பட்டவர்கள், தமக்கு வாழ இடமளித்த பாலஸ்தீன் அரேபியர்களை வஞ்சிக்க நினைத்தது எதனால்? ஐ.நா.வின் தீர்மானங்களெல்லாம் பாலஸ்தீன் விஷயத்தில் மட்டும் அற்பாயுளில் இறந்துவிடுவதன் காரணம் என்ன? இஸ்ரேல் யூதர்களுக்கும் பாலஸ்தீன் அரேபியர்களுக்கும் அப்படி என்னதான் பிரச்னை? 1948-ம் ஆண்டு இஸ்ரேல் என்கிற தேசம் வலுக்கட்டாயமாகப் பாலஸ்தீன் மண்ணில் தோற்றுவிக்கப்பட்டதிலிருந்துதான் இந்தப் பிரச்னை தீவிரமடையத் தொடங்கியது என்றாலும், பாலஸ்தீன் பிரச்னை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்துவரும் ஒன்று. பாலஸ்தீன் போராளி இயக்கங்களின் தோற்றம் முதல் இன்றைய செயல்பாடுகள் வரையிலான விரிவான அறிமுகம், இஸ்ரேல் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் பற்றிய துல்லியமான தகவல்கள், இஸ்ரேலிய உளவு அமைப்பான ‘மொஸாடின்’ செயல்பாடுகள், பாலஸ்தீன் பிரச்னை குறித்த உலக நாடுகளின் கண்ணோட்டம், யாசிர் அரஃபாத்தின் ஆயுதப்போராட்டம், அமைதி முயற்சிகள், அவற்றின் விபரீத விளைவுகள் என்று மிக விரிவான களப் பின்னணியுடன், ஆதாரபூர்வமான அரசியல் சரித்திரமாக குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடராக வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களின் பாராட்டுகளைப் பெற்றது.The biggest problem the world has seen in the twentieth century is the Israel-Palestine problem. It is an emotional problem, brought to the forefront by talented politicians, of the people belonging to two religions that have strong convictions and conflicts in the background. What is the reason for this problem remaining unsolved to this day? Millions have lost their lives in the struggle for the liberty of Palestine. The Palestine Arabs still roam about as refugees, sans home, sans property, sans relatives. Why prosperous Middle East countries have not come forward to help them? The Jews are a people who have run away to different parts of the globe for fear of their lives being lost. How did such people become hostile and cruel to the Palestine Arabs who gave them space and shelter to live in? With regard to the Palestine issue, why do all the UN resolutions die a premature death? What is the actual problem between the Israeli Jews and Palestine Arabs? Though the problem started in 1948, the year in which the land of Israel was forcefully created in Palestine soil, the Palestine problem has been in existence for thousands of years. A detailed introduction from the origin of Palestine freedom movements to their activities. Accurate information about the actions of Israel rulers, Israel’s Intelligence Agency Mossad’s activities, world outlook on Palestine problem, the armed struggle of Yasser Arafat, peace efforts and their dire consequences — this book gives a detailed account of all these, with proper background and authentic history. It appeared as a serial in Kumudam Reporter and had earned the praise of millions of readers and fans.