மதுரபாரதி

புத்தம் சரணம்

கிழக்கு

 90.00

Out of stock

SKU: 9788183680950_ Category:
Title(Eng)

Buddham Saranam

Author

Pages

240

Year Published

2005

Format

Paperback

Imprint

புத்தரின் போதனைகள் நமக்கு அறிவிக்கும் செய்திகளைக் காட்டிலும் அவரது வாழ்க்கை உணர்த்தும் பாடங்கள் அநேகம்.சமூக சீர்திருத்தவாதியாக, தத்துவஞானியாக, புதிய மதத்தின் ஸ்தாபகராக, ஒரு கலகக்காரராக, ஒழுக்கவாதியாக – புத்தரை எப்படி வேண்டுமானாலும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப தரிசிக்கமுடியும். நமது முன் தீர்மானங்களும் வறட்டுப் பிடிவாதங்களும் போலி நம்பிக்கைகளும் இருந்த இடம் தெரியாமல் போகக்கூடிய இடம் அவரது இருப்பிடம்.இந்தியத் தத்துவவாதிகளின் முதல் வரிசையில் வைத்து சிந்திக்கத்தக்கவர் புத்தர். ஆனால் இந்தியாவுக்கு வெளியே மக்கள் அவரை அறிந்திருக்கும் அளவுக்கு இந்தியர்கள் அறியவில்லை என்பது மிகப்பெரிய வியப்பு.தமது வாழ்க்கையே தமது செய்தியாக வாழ்ந்தவர் அவர்.கிழக்கு பதிப்பகம் வெளியிடும் இந்திய தத்துவஞானிகள் வரிசையில் மூன்றாவதாக வெளிவரும் இந்த புத்த சரிதம், புத்தரின் வாழ்க்கையை விவரிப்பதோடு, பவுத்தத்தின் அடிப்படைகளையும் மிக எளிமையாக விளக்குகிறது. நூலாசிரியர் மதுரபாரதி, ரமணரின் வாழ்வையும் போதனைகளையும் விளக்கும் ‘ரமண சரிதம்’ என்கிற நூலை முன்னதாக எழுதியிருப்பவர். அமெரிக்காவிலிருந்து வெளியாகும் தமிழ் மாத இதழான ‘தென்றலி’ன் ஆசிரியர்.’