Title(Eng) | Hamas – Bayangarathin Mugavari |
---|---|
Author | |
Pages | 144 |
Year Published | 2005 |
Format | Paperback |
Imprint |
ஹமாஸ் பயங்கரத்தின் முகவரி
கிழக்கு₹ 60.00
Out of stock
தகவல்களில் துல்லியம். மொழியின் அசுரப் பாய்ச்சலால் ஒரு விறுவிறுப்பான திரைப்படம் பார்க்கும் உணர்வைத் தருகிறது.அல் காயிதாவுக்கு நிகராக உலகம் அஞ்சும் மற்றுமொரு தீவிரவாத இயக்கம், ஹமாஸ். பாலஸ்தீன் விடுதலையை நோக்கமாகக் கொண்டு உருவான நூற்றுக்கணக்கான போராளி இயக்கங்களுள் ஒன்றாகத்தான் ஹமாஸ் அறிமுகமானது என்றாலும், மற்ற பாலஸ்தீன் குழுக்கள் நினைத்துப்பார்க்கக்கூட முடியாத படுபயங்கர குண்டுவெடிப்பு நடவடிக்கைகள் மூலமும், தற்கொலைப் படைத் தாக்குதல்கள் மூலமும் சர்வதேச அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலை முன்வைத்தது ஹமாஸ்.தனது உள்கட்டுமானம், திட்டங்கள், ஆயுதபலம், பணபலம் – அவ்வளவு ஏன்? தன்னுடைய தலைவர் யார் என்கிற விவரத்தைக்கூட மிகவும் ரகசியமாகவே வைத்திருக்கும் ஹமாஸ் குறித்து இத்தனை விரிவான, ஏராளமான விவரங்களை உள்ளடக்கிய நூல் இதுவரை தமிழில் வெளிவந்ததில்லை. தகவல் சேகரிப்பில் இந்தப் புத்தகம், ஒரு புரட்சி’