பா.ராகவன்

ஓப்பன் டிக்கெட்

கிழக்கு

 140.00

Out of stock

SKU: 9788183681001_ Category:
Title(Eng)

OpenTicket

Author

Pages

144

Year Published

2005

Format

Paperback

Imprint

விறுவிறுப்பு. சுவாரசியம். வித்தியாசம். ஆனந்த விகடனில் வாரம்தோறும் வெளியான இக்கட்டுரைகள், உலக அளவில் 2005ம் ஆண்டு நடைபெற்ற மிக முக்கியமான அரசியல் நிகழ்வுகளை விரிவாக அலசுகின்றன.இந்தக் கட்டுரைகள் விவாதிக்கும் விஷயங்கள் அனைத்தும் 2005ம் ஆண்டு உலக அளவில் பரபரப்பாகப் பேசப்பட்டவை. பல தளங்களில் காரசாரமான விவாதங்களை உண்டாக்கியவை. மேலாக, மக்களை மிக நேரடியாக பாதித்தவை.பாகிஸ்தானில் இருக்கும் ஹிந்து ஆலயங்களைக் குறித்து நமக்கென்ன அக்கறை என்றோ, ஆப்பிரிக்க மக்களின் உணவுப் பிரச்னை குறித்து இங்கே என்ன கவலை என்றோ, பாலஸ்தீன் யூதக் குடியிருப்புகள் கலைக்கப்பட்டது குறித்து நமக்கென்ன பாதிப்பு என்றோ யாரும் கருதுவதில்லை. உலகம் ஒரு பெரும் கிராமமாகிவரும் சூழலில், நம்மைச் சுற்றி நடப்பவை குறித்த கவனமும் அக்கறையும் இயல்பாகவே தமிழ் வாசகர்களுக்கு உண்டாகியிருப்பதன் விளைவுதான், இக்கட்டுரைகள் வெளியான போது கிடைத்த வரவேற்பும் பாராட்டுகளும்.சர்வதேச அரசியல் நிகழ்வுகள் குறித்த அக்கறையும் ஆழமும் மிக்க இக்கட்டுரைகளின் இன்னொரு சிறப்பு, இதில் கையாளப்பட்டிருக்கும் நகைச்சுவை ததும்பும் மொழிநடை.