Title(Eng) | Dawood – Oru Kutra Sarithiram |
---|---|
Author | |
Pages | 104 |
Year Published | 2006 |
Format | Paperback |
Imprint |
தாவூத் : ஒரு குற்ற சரித்திரம்
கிழக்கு₹ 50.00
Out of stock
சிறு சிறு திருட்டுகள், ஆள் கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல், போதை மருந்துக் கடத்தல் என்று படிப்படியாக வளர்ந்து இன்று உலகம் தேடும் பயங்கரவாதியாக உருவெடுத்திருக்கிறான் தாவூத் இப்ராஹிம்.மும்பையில் ஒரு சிறிய பெட்டிக் கடையாகத் தொடங்கிய இவனது பயங்கரவாத நிறுவனம் மும்பை குண்டுவெடிப்புக்குப் பிறகு அசுர வேகத்தில் வளர்ந்து இன்று சர்வதேச அளவில் தனது ராட்சஸக் கிளைகளைப் பரப்பியிருக்கிறது.9/11 சம்பவத்துக்குப் பிறகு அமெரிக்கா இவனை சர்வதேச பயங்கரவாதியாக அங்கீகரித்துப் பதவி உயர்வு அளித்திருக்கிறது. தாவூத்துக்கு மற்றொரு முகமும் உண்டு. ஒட்டுமொத்த பாலிவுட் சினிமா உலகத்தையும் இவன் தனது சட்டைப்பையில் செருகி வைத்திருந்தான். துபாயில் இவன் அளித்த விருந்துகளில் முன்னணி பாலிவுட் கதாநாயகர்களும், கதாநாயகிகளும் கலந்துகொண்டனர். பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் கதாநாயகன் ஜாவேத் மியான்டடின் மகனை தனது மகளுக்கு ஆர்ப்பாட்டமாக மணம் முடித்துக் கொடுத்திருக்கிறான். இந்த நிமிடம் வரை அகப்படாமல் தலைமறைவு வாழ்க்கை நடத்திவருகிறான் இந்த இந்திய பின்லேடன். தாவூத்தின் மிரள வைக்கும் கதையைத் தேடிச் செல்வது என்பது பயங்கரவாதத்தின் வேர்களைத் தேடிச் செல்வதற்கு ஒப்பானது. ‘