இந்திரா பார்த்தசாரதி

ஒளரங்கசீப்

கிழக்கு

 145.00

Out of stock

SKU: 9788183681414_ Category:
Title(Eng)

Aurangazeeb

Author

Pages

160

Year Published

2006

Format

Paperback

Imprint

நமது பள்ளிக்கூட சரித்திரப் புத்தகங்கள் சொல்கிற வரலாறுதான் சரியென்றால், மொகலாய மன்னர்களுள் ஒளஔரங்கசீப் ஒரு வில்லன். ஒரு மதத்துவேஷி. ரசனையற்றவர். சங்கீதம் பிடிக்காது. எந்தக் கலையும் பிடிக்காது. போர் வெறியர். சீக்கியர்களைத் தேடித்தேடி சீவித்தள்ளியவர். எல்லை விஸ்தரிப்புக்காகவே வாழ்ந்து, கிழடு தட்டிப்போய் செத்துப்போன ஓர் அயோக்கியன்.பாடநூல் ஆசிரியர்களைக் குற்றம் சொல்லிப் புண்ணியமில்லை. அகண்ட பெருவாழ்வின் ஒவ்வொரு அத்தியாயத்திலிருந்தும் ஒவ்வொரு வரியை எடுத்துத் தொகுத்தால் அப்படியொரு பிம்பம்தான் வரும்.உண்மையில் வேறெந்த முகலாயச் சக்கரவர்த்திகளைக் காட்டிலும் ஒளஔரங்கசீப் ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஓர் ஆளுமை. முற்றிலும் தவறாகவே புரிந்துகொள்ளப்பட்ட ஒரு மனிதர். ஒரு வகையில் பரிதாபத்துக்குரியவர். அரசியல் நேர்மை என்கிற விஷயத்தை முதல்முதலில் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியது ஔஒளரங்கசீப்தான். லஞ்சமற்ற, ஊழலற்ற, கட்டுக்கோப்பான நிர்வாகம் சாத்தியம் என்பதை நிரூபித்தவர் அவர்தான்.ஔஒளரங்கசீப் என்கிற சரித்திரச் சக்கரவர்த்தியின் கதையை இ.பா. ஏன் இப்போது நாடகமாக எழுதவேண்டும்? இந்த முன்னூறு வருடப் பழைய கதைக்கு இந்த 2006 ஆம் ஆண்டிலும் உயிரும் உடலும் தேவையும் இருப்பதை வாசகர்கள் மிக எளிதில் கண்டுகொள்ளலாம்!இதுவேதான் நந்தன் விஷயத்திலும்!’