N. ராமகிருஷ்ணன்

ரஷ்ய புரட்சி

கிழக்கு

 150.00

In stock

SKU: 9788183681452_ Category:
Title(Eng)

Russia Puratchi

Author

Pages

136

Year Published

2006

Format

Paperback

Imprint

லெனின் தலைமையில் உலகின் முதல் சோஷலிச அரசு ரஷ்யாவில் நிர்மாணிக்கப்பட்டபோதுமூக்கின் மீது விரல் வைத்து அதிசயித்தன உலக நாடுகள். ஆட்டுக்குட்டிகளாக அடங்கிக் கிடந்த ரஷ்யர்கள், முதல் முறையாக சுதந்தரத்தை சுவாசித்தது அன்றுதான். ‘சோவியத்’, ‘சோஷலிசம்’ ‘லெனின்’ போன்ற பதங்களை ஏகாதிபத்திய நாடுகள் அச்சத்துடன் உச்சரிக்கத்தொடங்கியதும்அன்றிலிருந்துதான்.மக்கள் என்ன பெரிய மக்கள்! அவர்களால் என்ன செய்துவிடமுடியும் என்ற இறுமாப்புடன் சீட்டுக்கட்டைப் போல அவர்களைக் கலைத்துப்போட்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள் ஜார் மன்னர்கள். அந்த ஜார் வம்சத்தையே கலைத்துப்போட்டுக் காணாமல் போகச் செய்தது ரஷ்யப் புரட்சி. உலக சரித்திரத்தையே மாற்றியமைத்த இந்த சிலிர்ப்பூட்டும் சாதனை எப்படி நிகழ்த்தப்பட்டது? இந்த மாபெரும் போராட்டத்தை எப்படித் திட்டமிட்டார்கள்? எப்படிச் செயல்படுத்தினார்கள்? மனித குலத்தின் மாபெரும் புரட்சியாக இன்றுவரையில் ரஷ்யப் புரட்சியைச் சொல்வதற்கு என்ன காரணம்? சிலிர்க்க வைக்கும் இந்த வரலாற்றுப் பதிவில் அத்தனை கேள்விகளுக்கும் விடைகள் உள்ளன. நூலாசிரியர் என். ராமகிருஷ்ணன், ஒரு பத்திரிகையாளர். தீக்கதிர் இதழில் தொடர்ந்து எழுதுபவர். ‘மார்க்ஸ் எனும் மனிதர்’, ‘அயர்லாந்து – எண்ணூறு ஆண்டு விடுதலைப்போர்’ உள்ளிட்ட ஐம்பது நூல்களின் ஆசிரியர். “