Title(Eng) | Indre Inge Ippozhuthe |
---|---|
Author | |
Pages | 160 |
Year Published | 2006 |
Format | Paperback |
Imprint |
இன்றே இங்கே இப்பொழுதே
கிழக்கு₹ 70.00
Out of stock
உலகில் சாதனையாளர்களின் எண்ணிக்கை குறைவாகவும், சாமானியர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருப்பது ஏன்? சாதனையாளர்கள் எல்லோரும் வானத்திலிருந்து குதித்தா வந்தார்கள்? ஏன் நம்மாலும் சாதிக்க முடியாது? – அதே இரண்டு கைகள், இரண்டு கால்கள், இரண்டு கண்கள், காதுகள், ஒரு வாய், ஒரு மூக்கு, ஒரு மூளைதானே? – ஒரு நாளைக்கு 24 மணிநேரம் என்பதும் அனைவருக்கும் பொதுவானதுதானே? அப்புறம் எப்படி ஒரு சிலரால் மட்டும் மிகப்பெரிய அளவில் பிரகாசிக்க முடிகிறது? பெரும்பாலானவர்களால் முடிவதில்லை? காரணம் இதுதான். சாதனையாளர்கள் சரியாக முடிவெடுப்பவர்களாக இருக்கிறார்கள். எந்தப் பிரச்னைக்கு, எப்போது, என்னமாதிரியான தீர்வுகள் சரி என்று துல்லியமாகக் கணிக்கிறார்கள். சிறப்பான முடிவெடுக்கும் திறன் என்பது யாரோ தேவதை வந்து கையை உயர்த்தி ஆசீர்வாதம் செய்வதால் வருவதல்ல. மிக எளிமையான பயிற்சிகளின் மூலம் யார் வேண்டுமானாலும் அட்டகாசமாக முடிவெடுக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள முடியும். ஒரு விஷயத்தில் மட்டும் தெளிவாக இருங்கள்! உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நல்லது கெட்டதுக்கும் நீங்கள், நீங்கள் மட்டுமே காரணமாக இருக்கிறீர்கள். ஆகவே, உங்களின் சிறப்பான, மிகப்பெரிய வெற்றிகளையும் நீங்களேதான் தீர்மானிக்கிறீர்கள். அந்த வெற்றிகளை உங்களுக்குக் கொண்டுவந்து சேர்ப்பது, உங்களுடைய முடிவெடுக்கும் திறன் தான். மிக நேர்த்தியாக, ஆணித்தரமாக, ஆச்சர்யப்படத்தக்க வகையில் உங்களது முடிவுகள் அல்லது தீர்மானங்கள் அமைவதற்கு இந்தப் புத்தகம் உதவப்போகிறது. Decison Making என்பது ஒரு பெரிய நிர்வாகவியல் சப்ஜெக்ட். அதை படு எளிமையாகச் சொல்லிக்கொடுக்கிறது இந்நூல்.