சிபி கே. சாலமன்

நீங்கள் தான் நம்பர் 1 என்ன பெட்

கிழக்கு

 95.00

Out of stock

SKU: 9788183681650_ Category:
Title(Eng)

Enna Bet

Author

Pages

136

Year Published

2006

Format

Paperback

Imprint

எவ்வளவு உயரம் எகிறிக் குதித்தாலும் எட்டாத வானம்போல வெற்றி ஆட்டம் காட்டுகிறதா? சே, ஜஸ்டு மிஸ்’ என்று சலித்துக்கொள்கிறீர்களா? ஸ்டாப்! நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி. இனி உங்களுக்கும் வெற்றிக்கும் இடையிலான தூரம் என்பது, இந்தப் புத்தகம் இப்போது இருக்கும் இடத்துக்கும் உங்கள் கரங்களுக்கும் இடையில் உள்ள தூரம் மட்டுமே! ஓர் அடிப்படை ரகசியத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். வெற்றி என்பது யாருடனும் கூடப் பிறப்பதில்லை. சில எளிய முயற்சிகளின் மூலம் நம்மோடு ஒட்டிக்கொள்கிற வஸ்துதான் அது! எளிய முயற்சிகளா! சந்தேகமே வேண்டாம். எளிமையானவைதான். மிக, மிக எளிமையானவை. நம்முடைய பெரும்பாலான செயல்கள் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதால்தான் வெற்றி தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது. இந்தப் புத்தகம் உங்கள் அபாரமான வெற்றிக்கான எளிய, யதார்த்தமான வழிகளை, ஜோடனையில்லாமல் சொல்லித் தருகிறது. அதுவும் உங்களுக்குள்ளே ஒளிந்திருக்கும் திறமையை எடுத்துத் தூசுதட்டிக் காட்டியே! சந்தேகமில்லாமல், இந்தப் புத்தகம் உங்களுடைய மனச்சாட்சி. அட, ஆமாம்! அட, ஆமாம்! என்று ஒவ்வொரு உதாரணத்தின்போதும் உங்கள் உள்ளம் துள்ளிக்குதிக்கப் போகிறது. ஒவ்வொரு முறை அப்படி நீங்கள் துள்ளும்போதும் ஓரடி உயரப் போகிறீர்கள். எழுதிவைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஜெயித்தே தீரப்போகிறீர்கள். என்ன பெட்? ‘