Title(Eng) | KGB |
---|---|
Author | |
Pages | 192 |
Year Published | 2006 |
Format | Paperback |
Imprint |
கேஜிபி
கிழக்கு₹ 210.00
Out of stock
கேஜிபி – சோவியத் யூனியனின் தனிப்பட்ட உளவு அமைப்பு மட்டுமல்ல இது. உலகஉருண்டையிலுள்ள அத்தனை தேசங்களிலும் ஊடுருவி, அத்தனை தேசங்களின் ரகசியங்களையும் பிரதி எடுத்து, மிக கவனமாகப் பாதுகாத்து, காய்கள் நகர்த்திய மாபெரும் உளவு சாம்ராயூஜியம்.கேஜிபியின் உளவாளிகள் எங்கும் இருந்தனர், எதிலும் இருந்தனர். அணுகுண்டு தயார் செய்தாலும் சரி, அவரைக்காய் பயிர் செய்தாலும் சரி, இவர்களது பார்வைக்குத் தப்பாமல் எந்தவொரு நாடும் எதுவொன்றையும் செய்துவிட முடியாது.சிலிர்க்க வைக்கும் செயல்திட்டம், அதிர வைக்கும் ஆள்பலம், படு நேர்த்தியான கட்டமைப்பு. அத்தனையும் இருந்தது இவர்களிடம். இவர்கள் எப்படி ஆள்களைச் சேர்த்தார்கள், எங்கே வைத்துப் பயிற்சிகளை அளித்தார்கள்? எப்படிப்பட்ட பயிற்சிகள் அவை? இது வெறும் உளவு அமைப்பு மட்டும்தானா?பரம ஜாக்கிரதையாக இயங்கிக்கொண்டிருந்த இந்த அமைப்பைப் பற்றிய ரகசியங்கள் எப்படி வெளியே கசிந்தன? யாரால்? கேஜிபியின் வரலாறைப் படிப்பது, ஒரு மர்மநாவலைப் படிப்பதைவிட சுவாரசியமானது.