Title(Eng) | Appusamiyum Africa Azhagiyum |
---|---|
Author | |
Pages | 320 |
Year Published | 2006 |
Format | Paperback |
Imprint |
அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்
கிழக்கு₹ 120.00
Out of stock
அப்புசாமிக்கு வந்த வாழ்வைப் பாருங்கள்! இந்தத் தள்ளாத வயதில் சுக்கிரதசை அவரைச்சுற்றிச்சுற்றி, சுழற்றிச் சுழற்றி அடித்திருக்கிறது. எங்கோ ஆப்பிரிக்காவில் ஒரு பொந்தில்வசித்து வந்த ஆப்பிரிக்க அழகி இடீலி, ஏரோப்ளேன் ஏறி இந்தியாவுக்கு வந்து,’மணந்தால் அப்புசாமியைத்தான் மணப்பேன்’ என்று ஒற்றைக் காலில் நிற்கிறாள்.நொடிக்கு நொடி சீதாப்பாட்டியுடன் டூ விட்டுக்கொண்டிருந்த அப்புசாமிக்கு, இடீலியைப் பார்த்ததும் பரம குஷி. அப்படியே ‘பச்சக்’ என்று அவளுடன் சட்னிபோல்ஒட்டிக்கொண்டு விட்டார். அப்புறம் என்ன? ஒரே கன்னாபின்னா ரகளைதான்!இடீலியுடன் சேர்ந்து ஆப்பிரிக்க டூயட் பாடுகிறார். கொதிக்கும் அண்டாவில் இறங்குகிறார். ஆப்பிரிக்க மொழி பேசுகிறார். சீதாப்பாட்டிக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புகிறார். கூடவே, பல இடியாப்பச் சிக்கல்களிலும் மாட்டிக்கொண்டு விழி பிதுங்குகிறார்.விருந்து தயார். வந்து ஒரு கை பாருங்கள்!