Title(Eng) | No Problem |
---|---|
Author | |
Pages | 112 |
Year Published | 2006 |
Format | Paperback |
Imprint |
நோ ப்ராப்ளம்
கிழக்கு₹ 50.00
Out of stock
ஜலதோஷம், தீவிரவாதம், மன அழுத்தம் மூன்றுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. எப்போது தாக்கும் என்று தெரியாது. தாக்கினால் அத்தனை சுலபத்தில் போகாது. போனாலும்,மீண்டும் திரும்பி வராது என்பது சொல்வதற்குஇல்லை.வாழ்வின் ஒவ்வொரு கணமும் டென்ஷன். ஒவ்வொரு நாளும் பிரச்னை. நிற்பதற்குக் கூட நேரமில்லாமல் கால்களில் சக்கரங்களைப் பொருத்திக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறோம். விளைவு? ‘வந்தேன் ஐயா’ என்று உள்ளே நுழைகிறது மன அழுத்தம்.மன அழுத்தம் வந்துவிட்டால் எல்லாமே தலைகீழ்தான். சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட மிதமிஞ்சிய எரிச்சல் ஏற்படும்.எதையாவது எடுத்துப் போட்டு உடைக்கலாமா என்று தோன்றும். தூக்கம் வராது. சாப்பிடப்பிடிக்காது. அது ஒரு இம்சை அரசன் 250வது எலிகேசி.மன அழுத்தம் என்பது ஒரு வியாதி கிடையாது.அது ஒரு மனநிலை. கன்னத்தில் கை வைத்து மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பதால் மன அழுத்தம் குறைந்துவிடாது.எனில், மன அழுத்தத்தை எப்படி எதிர்கொள்வது? அதைத்தான் மயிலிறகு வருடலுடன் சொல்லிக் கொடுக்கிறது இந்தப் புத்தகம்.