சிபி கே. சாலமன்

திருப்பிப் போடு

கிழக்கு

 60.00

Out of stock

SKU: 9788183682480_ Category:
Title(Eng)

Thiruppi Podu

Author

Pages

136

Year Published

2006

Format

Paperback

Imprint

உச்சத்தை அடைந்தவர்களின் வெற்றி ஃபார்முலாவைக் கொஞ்சம் உற்று நோக்கினால் ஓர உண்மையை உணரலாம். அவர்கள் வழக்கமாகச் சிந்திக்காமல் மாறுபட்டுச் சிந்தித்ததால்தான் வெற்றி பெற்றிருப்பார்கள்.பத்தோடு பதினொன்றாக இருப்பதா உங்கள் நோக்கம்? ஆயிரத்தில் ஒருவராக உயரவேண்டும். இல்லையா?ஆக, மந்திரச்சொல் இதுதான். கிரியேட்டிவிடி. மற்றவர்களிடமிருந்து உங்களை வித்தியாசப்படுத்தி, உங்களுக்கென்று ஒரு பிரத்தியேக அடையாளத்தை ஏற்படுத்துவது உங்களுடைய கிரியேட்டிவிடிதான்.கற்பனைத்திறன், படைப்பாற்றல் என்பது வரமல்ல. வளர்த்துக்கொள்ளக் கூடிய ஒரு கலைதான். யாராலும் முடியும். உங்களாலும் கூட! பளிச்சென்று ஒரு பல்ப். வித்தியாசமான ஒரு கோணம். மின்னல் போல் புது ஐடியா. மூளைக்குள் தூங்கிக் கிடக்கும் அத்தனை நியூரான்களும் போர்வையை உதறித் தள்ளிவிட்டு உற்சாகத்துடன் எழுந்துவிடும். தானாகவே மட்டுமல்ல, சில பயிற்சிகளின் மூலம் அப்படி உதிக்கச் செய்யவும் முடியும்.சிபி கே. சாலமனின் இந்நூல் உங்கள் கற்பனைத் திறனை வளர்ப்பதற்கான வழிகளை அறிமுகப்படுத்துகிறது. அதன் மூலம் உங்கள் முயற்சிகளுக்கு நீங்களே புதுப்பொலிவு தரப்போகிறீர்கள். உங்கள் விதியை நீங்கள் திருப்பிப் போடப் போகிறீர்கள். தயாரா?