ஆர். முத்துக்குமார்

அன்புள்ள ஜீவா

கிழக்கு

 60.00

Out of stock

SKU: 9788183682886_ Category:
Title(Eng)

Anbulla Jeeva

Author

Pages

144

Year Published

2007

Format

Paperback

Imprint

விவரிப்புக்கு அப்பாற்பட்ட எளிமை. அதிகபட்ச நேர்மை. உள்ளத்தில், வாக்கில் சத்தியம்.ஜிவாவின் முக்கிய அடையாளங்கள் இவை.தன்னலமற்ற போராளியாக ஜிவா பரிணமித்த போது இந்த அடையாளங்களே அவரது ஆயுதங்களாகவும் மாறின.காந்தியத்தில் தொடங்கி, சுயமரியாதை இயக்கத்தைத் தொட்டுப் பிடித்து, பின்னால் பொதுவுடைமை இயக்கத்தில் தன்னைக் கரைத்துக்கொண்டவர் ஜிவா.மனித ஜாதியை உயர்த்தி அதி உன்னதமான ஓர் எதிர்காலத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்பதுதான் ஜிவாவின் கனவு. அவரது இருப்புக்கும் எண்ணற்ற பல போராட்டங்களுக்கும் அர்த்தம் அளிக்கக்கூடிய உந்துசக்தியாக இருந்தது இந்தக் கனவுதான்.குறையே சொல்ல முடியாத பரிபூரண வாழ்க்கை அவருடையது. அதனால்தான்,கொள்கை அளவில் ஜிவாவோடு முரண்பட்ட பலராலும் கூட, ஜிவாவை நோக்கி சுண்டு விரலைக்கூட உயர்த்த முடியாமலேயே இருந்தது.ஆகச் சிறந்த பேச்சாளர், அரசியல் தலைவர்,பத்திரிகை ஆசிரியர் என்ற பன்முகப் பரிமாணங்களையும் விஞ்சி நிற்பவை அவரது எளிமையும் மனிதாபிமானகம்தான். பிரமிப்பூட்டும் ஜிவாவின் வாழ்க்கையை எளிமையான நடையில் விறுவிறுப்பாக அறிமுகம் செய்து வைக்கிறார் ஆர். முத்துக்குமார்.Ineffable simplicity. Maximum honesty. Truth in heart, word and deed. These are the important signs of Jiva. And these were his shining weapons when he took on the dimension of an unselfish champion. Jiva began in Gandhiism, went on to Suya Mariyadhai Iyakkam (self-dignity movement) and dissolved himself in communism. Jiva