Title(Eng) | Srimaan Sudharsanam |
---|---|
Author | |
Pages | 288 |
Year Published | 2007 |
Format | Paperback |
Imprint |
ஸ்ரீமான் சுதர்சனம்
கிழக்கு₹ 240.00
Out of stock
வாழ்க்கையின் சிக்கலான தருணங்களைக்கூட நகைச்சுவையாகச் சொல்லும் தேவனின் முக்கியமான படைப்புகளுள் ஒன்று ஸ்ரீமான் சுதர்சனம்.குடும்பம், அலுவலகம் சார்ந்த உலகம் -இரண்டும் கலந்த ஒரு சராசரி ஆபீஸ் குமாஸ்தாவின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் அவனை வாழ்வின் அடுத்தக் கட்டத்துக்கு எப்படி உயர்த்துகிறது? குமாஸ்தா சுதர்சனம் எப்படி ஸ்ரீமான் சுதர்சனமாகிறான்?ஸ்ரீமான் சுதர்சனமாக அவன் படும் கஷ்டங்களும், குடும்பத்தினரிடம் மாட்டிக் கொண்டுபடும் அவஸ்தைகளும் தேவனின் நடையில் ஹாஸ்யமாக வந்து விழுகின்றன.பொதுவாக, நகைச்சுவைக் கதைகளின் ஆயுள்காலம் மிகவும் சொற்பம். உலக அளவில் எடுத்துக் கொண்டால் கூட, இன்று வரை நீடித்து நிற்கும் நகைச்சுவைக் கதைகளின் பெயர்களை ஒரு உள்ளங்கையில் எழுதிவிடலாம். தேவனின் ஸ்ரீமான் சுதர்சனம் அந்தப் பட்டியலில் மிகச் சுலபமாக வரும்.விகடனில் 23 ஆண்டுகள் பணியாற்றிய தேவனின் ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ‘ஸ்ரீமான் சுதர்சனம்’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘சி.ஐ.டி.சந்துரு’ ஆகியவை முக்கியப் படைப்புகள்.அவருடைய நகைச்சுவைக் கதைகளில் மிகவும் பிரபலமானவை, ‘கோமதியின்காதலன்’, ‘கல்யாணி’, ‘மிஸ் ஜானகி’.Devan