பா.ராகவன்

ISI – நிழல் அரசின் நிஜ முகம்

கிழக்கு

 80.00

Out of stock

SKU: 9788183683234_ Category:
Title(Eng)

ISI – Nizhal Arasin Nija Mugam

Author

Pages

184

Year Published

2007

Format

Paperback

Imprint

ஓர் உளவு நிறுவனமாகத் தொடங்கப்பட்ட ஐ.எஸ்.ஐ., இன்றைக்கு பாகிஸ்தானின் தலைவிதியைத் தீர்மானிக்கும் மாபெரும் சக்தியாக அறியப்படுகிறது. சிக்கல் மிகுந்த அந்த தேசத்தின் அரசியலில் காய் நகர்த்தும் அதிகாரம் கொண்ட அமைப்பு. இங்கே காஷ்மீர் விவகாரமானாலும் சரி, அங்கே கராச்சி கலவரமானாலும் சரி. முன்னணியிலும் பின்னணியிலும் எப்போதும் நீக்கமற நிறைந்திருப்பது ஐ.எஸ்.ஐ.பாகிஸ்தான் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் அல்ல; பாகிஸ்தான் அரசாங்கத்தையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது ஐ.எஸ்.ஐ.இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற அத்தனை சிறிய, பெரிய யுத்தங்களுக்கும் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியவர்கள் இவர்கள்தான். பாகிஸ்தானின் உணர்ச்சிபூர்வமான கோரிக்கையாக காஷ்மீர் இந்த நிமிடம் வரை நீடிப்பதும், இருபத்து நான்கு மணி நேரமும் இந்திய எல்லையில் தீப்பொறிகள் பறப்பதும் இவர்களால்தான்.தனித்தனி பிரிவுகள், தனித்தனி பொறுப்புகள். தகவல் சேகர்க்க. குழப்பங்கள் விளைவிக்க. காஷ்மீர் போராளிகளுக்குக் கர்ம சிரத்தையுடன் பயிற்சி அளிக்க. இந்திய அரசியல் விவகாரங்களை, அரசியல்வாதிகளை, அதிகாரிகளை உளவு பார்க்க. போர் வியூகம் அமைக்க. இன்னபிற.பிரமிக்க வைக்கும் நிர்வாகக் கட்டமைப்பு, அதிநிவீன ஆயுதங்கள், திகைப்பூட்டும் நெட் ஒர்க், அதிரடி அடாவடி செயல்திட்டங்கள் என்று ஓர் உளவு அமைப்புக்கான இலக்கணத்தையே திருத்தி எழுதிய அமைப்பு ஐ.எஸ்.ஐ. சி.ஐ.ஏ.விடமிருந்து பிரத்தியேகப் பயிற்சியும் ஆசிர்வாதகம் பெற்ற உளவு அமைப்பும் இதுவே.ஐ.எஸ்.ஐ.யின் கட்டுமானம் எப்படிப்பட்டது? எப்படி ஆள்கள் சேர்க்கிறார்கள்? எப்படி, எங்கே வைத்து பயிற்சியளிக்கிறார்கள்? எப்படி ரகசியம் காக்கிறார்கள்? என்னென்ன செய்கிறார்கள்?ஐ.எஸ்.ஐ.யின் சர்ச்சைக்குரிய செயல்பாடுகளை, திட்டங்களை, வேட்கையை நுணுக்கமாக விவரிக்கும் இந்நூல், பாகிஸ்தானின் சம கால சரித்திரத்தையும் ஆழமாக ஆராய்கிறது.Started as a spying agency, the ISI today is a great force that could decide the destiny of Pakistan. It is an organization that can cleverly move the pawns in the political game of the problematic nation. Whether it is the Kashmir problem here or Karachi problem there, the ISI will be there in the front and the back of it. It is not under the control of the Pakistan government but rather it controls the Pakistan government. From skirmishes to battles between India and Pakistan, the scripts and dialogue were written and directed by the ISI only. They are the cause behind Pakistan