எழில் கிருஷ்ணன்

எதிரி

கிழக்கு

 100.00

Out of stock

SKU: 9788183683302_ Category:
Title(Eng)

Ethiri Encyclopaedia

Author

Pages

192

Year Published

2007

Format

Paperback

Imprint

நீங்கள் ஒரு வெற்றியாளராகவோ, வெற்றியாளர் ஆகும் விருப்பம் கொண்டவராகவோ இருப்பீர்களானால் கண்டிப்பாக ஓர் எதிரி உண்டு. உங்கள் நிம்மதியைக் குலைக்க. உங்கள் வளர்ச்சியைத் தடுக்க. உங்கள் இடத்தைத் தட்டிப் பறிக்க. நீங்கள் இயங்கக்கூடாது. அதுதான். அது ஒன்றுதான் உங்கள் எதிரியின் நோக்கம். எதற்குப் பிரச்னை? உங்கள் எதிரியை அடையாளம் கண்டு செயல்படவிடாமல் அடித்துவிடுவதுதான் உங்களுக்கு நல்லது.யார் எதிரி? நாளை தந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு பணத்தைத் திருப்பிக் கொடுக்காத நபரா? வண்டியில் செல்லும்போது பின்னால் வந்து மோதுபவரா? உங்களுக்குக் கிடைக்கவேண்டிய இன்கிரி்மெண்ட்டைத் தட்டிப் பறித்துக்கொண்ட சக ஊழியரா? எப்போதும் சீறி விழும் சிடுமூஞ்சி பாஸா? காதலுக்குத் தடைவிதிக்கும் பெற்றோரா?சம்பந்தமில்லாதவர்களை எதிரியாகக் கருதுவதன் மூலம் மெய்யான எதிரியைக் கண்டுபிடிக்காமலேயே இருந்துவிடுகிறோம். அவர் மேலும் மேலும் பலம்பெற்று, நம்மை வீழ்த்த அனுமதிக்கிறோம்.எதிரி வேறு. போட்டியாளர் வேறு. போட்டியாளர் ஜெயிக்கப்படவேண்டியவர். எதிரி ஒழிக்கப்படவேண்டியவன். ஆனால், அது அத்தனை சுலபமல்ல. எதிரியை அடையாளம் கண்டுகொள்வது ஒரு கலை. அழிப்பது மற்றொரு கலை.நமக்கே தெரியாமல் நிழல் போல் நம்மைப் பின்தொடரும் எதிரியை எப்படி இனம் கண்டுகொள்வது? அவனது பலத்தை எப்படி குறைப்பது? எப்படி அழிப்பது?கத்தியின்றி, ரத்தமின்றி, புத்தியைக் கொண்டு எதிரியை நசுக்கி அழிக்கும் அற்புத சூத்திரத்தை விவரிக்கிறது இந்நூல்.உறைய வைக்கும் நிஜ சம்பவங்கள். தீவிரமான அலசல்கள். நுணுக்கமான வழிமுறைகள். உங்கள் எதிரியை வீழ்த்துவதற்கு இதைவிடச் சிறந்த பிரமாஸ்திரம் வேறு இல்லை!If you are winner or one who wants to be a winner, you will definitely have enemies to destroy your peace, to prevent your development and to snatch your opportunities. The only aim of your enemy is that you should not be active. Why problems? The best way is to identify your enemy and paralyse him. But who is your enemy? The one who promises to return the borrowed money the next day but never does it? Or the one who dashes against you from behind when you go on a bike? Or the colleague who snatches the increment due to you? Or the boss who is always irritative? Or the parents who object to your love? We miss the real enemy by imagining as enemies those who are not. And by doing so, we allow the real enemy to go on strengthening himself. Enemy and competitor are not one and the same. Competitor is one who is to be won. Enemy is one who is to be eliminated. But it is not that easy. To identify our enemies is an art. And to do away with them is another. How to identify our enemies who follow us like a shadow unawares? How to lessen his strength? How to destroy it? This book teaches you the formula of eliminating your enemies without the use of weapons and without shedding blood. It is full of freezing real life incidents. Deep analyses. Subtle techniques. You will have no other brammastra (ultimate weapon) to eliminate your enemy than this!