Title(Eng) | Kappalottiya Thamizhar |
---|---|
Author |
கப்பலோட்டிய தமிழர்
₹ 60.00
In stock
விடுதலைப் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த காலகட்டம் அது. வர்த்தகம் செய்ய உள்ளே வந்த ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்வது எந்த விதத்தில் நியாயம்? மிருகத்தனமான இந்த ஒடுக்குமுறையை இன்னும் எத்தனை காலத்துக்கு ஒப்புக்கொள்ளமுடியும்?வ.உ.சி.யின் உள்ளத்தில் மின்மினிப்பூச்சி போல் விடுதலைக்கனல் மின்னத் தொடங்கியது. நாளடைவில், அது பெரும் நெருப்பாக உருவெடுத்தது. வ.உ.சி.யின் போராட்ட வாழ்க்கை ஆரம்பித்தது அந்தப் புள்ளியில்தான்.கடுமையான சிறை தண்டனை. நினைத்துப் பார்க்க முடியாத சித்திரவதைகள். ஆனால், வ.உ.சி. எதற்கும் அசைந்துகொடுக்கவில்லை. கொண்ட கொள்கையை மாற்றிக்கொள்ளவில்லை.இன்று, இந்திய சரித்திரத்தின் பக்கங்களில் வ.உ.சி.-யின் பெயர் ஒரு வீரச் சின்னமாக நிலைத்து நிற்கிறது.