Title(Eng) | Hello, Ungalaithaan Thedugirargal |
---|---|
Author | |
Pages | 168 |
Year Published | 2007 |
Format | Paperback |
Imprint |
ஹலோ, உங்களைத்தான் தேடுகிறார்கள்!
கிழக்கு₹ 75.00
Out of stock
வேலை தேடுகிறீர்களா? அல்லது வேலை மாறவிரும்புகிறீர்களா? எம்மாதிரியான பணிகளுக்கு எப்படிப்பட்ட ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?நிர்வாகவியலில், மனித வள மேம்பாடு என்கிற ‘HR’ ஒரு கடல். நீங்கள் இத்துறையில் நுழைய விரும்பினாலும் சரி, அதிலேயே இருக்கிறவரானாலும் சரி, அல்லது உங்களை இண்டர்வியூ செய்கிற HR அதிகாரிகளைக் கவர்ந்து, ஒரு சூப்பர் வேலையில் செட்டில் ஆகிவிட விரும்பினாலும் சரி. இந்தப் புத்தகம் உங்களுக்கு வழிகாட்டும்.பெரும் முதலீடும் புத்திசாலித்தனமான செயல்திட்டமும் இருந்தால் மட்டும் போதாது. ஒரு நிறுவனம் தொடர்ந்து லாபகரமாக இயங்கவேண்டுமானால் அங்கே பணிபுரிபவர்கள் அதிகபட்ச திறமையுடன் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் இயங்க வேண்டும். அதாவது, நீங்கள்.கார்ப்பரேட் ஏணியில் வேகமாக ஏறி உச்சத்தைத் தொட வேண்டும் என்னும் கனவு உங்களிடம் இருந்தால் மனித வள மேம்பாடு (Human Resource Development) பற்றிய அடிப்படைப் பாடங்களை உங்கள் மன நுனியில் வைத்திருக்கவேண்டும்.உங்கள் வேலையின் தன்மை என்ன? நீங்கள் பணிபுரியும் நிறுவனம் உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் விஷயங்கள் என்னென்ன? உங்கள் நிறுவனத்தின் இலக்குகள் என்னென்ன? அதை அடைவதில், உங்களுடைய பங்களிப்பு என்ன? உங்கள் மேலதிகாரியின் தேவைகளை எந்த அளவுக்கு நீங்கள் புரிந்துகொண்டு பூர்த்திசெய்கிறீர்கள்? ஊழியர்களின் தேவைகளை நிர்வாகம் எப்படி உடனுக்குடன் கண்டறிந்து நிறைவேற்றவேண்டும்?உங்களைப் பற்றி உங்கள் நிர்வாகம் தெரிந்துகொள்ளவண்டும். நீங்கள் உங்கள் நிர்வாகத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு இந்நூல் உதவும்.பயனளிக்கும் நிர்வாகவியல் பாடங்களை ஏராளமான கதைகளுடன், நடைமுறை உதாரணங்களுடன் மிக எளிமையாக விவரிக்கும் நூல் இது.