என். சொக்கன்

பில் கேட்ஸ் – சாஃப்ட்வேர் சுல்தான்

கிழக்கு

 225.00

In stock

SKU: 9788183684378_ Category:
Title(Eng)

Bill Gates – Software Sultan

Author

Pages

230

Year Published

2007

Format

Paperback

Imprint

பில் கேட்ஸின் வருகைக்கு முன்னால், மென்பொருள் துறை நான்கு கால்களால் தவழ்ந்துகொண்டு இருந்தது. புரோகிராம் எழுதிச் சம்பாதிக்கப்போகிறேன் என்று யார் சொன்னாலும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.பில் கேட்ஸ் தன் முதல் புரோகிராமை தன் மூளைக்குள் அழுத்தந்திருத்தமாக எழுதினார். உலகமே வியக்கும் வகையில் ஒரு நிறுவனத்தைத் தொடங்குவேன். கம்ப்யூட்டர் இல்லாமல் ஓர் அணுவும் அசையாது என்னும் நிலையை ஏற்படுத்துவேன். குழந்தைகள் கூட ஆசையுடன் நெருங்கி வந்து பழகுவதற்கு ஏற்ப கம்ப்யூட்டர் பயன்பாட்டை எளிமையாக்குவேன்.அசாதாரணமான கனவு அது. அந்தக் கனவை நினைவாக்க, அலாவுதீன் பூதம் போல் இருபத்து நான்கு மணி நேரமும் இயங்கினார் பில் கேட்ஸ். உலகின் தலைசிறந்த மென்பொருள் நிறுவனமாக மைக்ரோசாஃப்ட் ஜொலிக்கும் வரை ஒரு நொடிகூட ஓயவில்லை அவர்.கடந்த இரு தலைமுறைகளில் பில் கேட்ஸ் அளவுக்கு உலக மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்திய இன்னொரு பிரபலம் இல்லை. பில் கேட்ஸிடம் இருந்து ஏதாவதொரு நிர்வாகவியல் பாடத்தையாவது கற்றுக்கொள்ளாத தொழிலதிபரைப் பார்ப்பது அபூர்வம்.மைக்ரோசாஃப்ட் என்னும் கனவு சாம்ராஜ்ரியத்தை உருவாக்க பில் கேட்ஸ் நடத்திய போராட்டங்களின் தொகுப்பே அவர் வாழ்க்கை. வாசித்து முடித்துவிட்டு, நம்பிக்கையுடன் உங்கள் கனவுக்கோட்டையைக்கட்ட ஆரம்பியுங்கள்.இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்: N. சொக்கன் – 01-01-10