Title(Eng) | Pennaal Mattumae Mudiyum |
---|---|
Author | |
Year Published | 2007 |
Format | Paperback |
Imprint |
பெண்ணால் மட்டுமே முடியும்
நலம்₹ 70.00
Out of stock
மீந்து போன இட்லி மாவை என்ன செய்வது? தேர்க்கோலத்துக்கு எத்தனை நேர் புள்ளி, எத்தனை சந்து புள்ளி? வெஜிடபிள் புலவில் எத்தனை டீ ஸ்பூன் உப்பு தூவ வேண்டும்? டிவி சீரியல் நாயகி இறுதியில் என்ன ஆவார்? nஎதையாவது பூசி ஏழு நாளில் சருமத்தை மினுமினுப்பாக்க முடியுமா?’பெண்களுக்காக’ ஊடகங்கள் அலசும் முக்கியப் பிரச்னைகள் இவைதான். இவையெல்லாம் தீர்க்கப்பட்டுவிட்டால் பெண்கள் எல்லோரும் சுபிட்சமாக இருப்பார்கள் என்று சத்தியம் செய்கின்றன.விளைவு? வாஷிங் மெஷின், டிவி, கிரைண்டர், கணவர், குழந்தைகள். இந்த வட்டத்தைத் தாண்டி பெரும்பாலான பெண்கள் எட்டிக்கூடப் பார்ப்பதில்லை. ஒரு perfect housewife ஆக மாறினாலே போதும் என்னும் மனநிலை பலருக்கும் வந்துவிடுகிறது.நிறைய சவால்களை, நிறைய தடைகளை, நிறைய பிரச்னைகளைக் கடந்து ஜெயிக்க வேண்டிய கட்டாயமும் அவசியமும் முன்னெப்போதையும் விட இன்றைய பெண்களுக்கு நிச்சயம் உண்டு.பெண்களின் உண்மையான பிரச்னைகள் தொடர்பாக ஆழமான அலசல்களை, விவேகமான விவாதங்களை, சாமர்த்தியமான தீர்வுகளை முன்வைக்கும் இந்நூல் பெண்ணை ஓர் உணர்ச்சிப் பொட்டலமாக அணுகாமல், ஆரோக்கியமான மாற்றங்களை கொண்டு வரப்போகும் மகத்தான சக்தியாக மாற்றப்போகிறது.பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. நீங்கள் அதிகம் நேசிக்கும் பெண்மணியின் வளமான எதிர்காலத்தில் உங்களுக்கு அக்கறை உண்டு அல்லவா?