கரு முதல் குழந்தை வரை


Author:

Pages:

Year: 2007

Price:
Sale priceRs. 275.00

Description

கருத்தரிப்பதற்கு உங்களைத் தயார் செய்துகொள்வது எப்படி?கர்ப்பக் காலத்தில் என்னென்ன பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்? கர்ப்பக் காலத்தில் தாய்க்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள் என்னென்ன?கர்ப்பிணிக்கு ஏற்ற உணவு முறை எது?கர்ப்பக் காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா? பிரசவ நேரத்தில் எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்?கருத்தரிக்க முடியாதவர்களுக்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன?- இவை தவிர, மக்கள் மனத்தில் எழும் எத்தனையோ கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்தப் புத்தகம். நூலாசிரியர் டாக்டர் ஜெயராணி காமராஜ், மருத்துவப் படிப்பில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக டாக்டர் அனந்தாச்சாரி விருதும், பெண்களுக்கான மருத்துவ மேற்படிப்பில் (டி.ஜி.ஓ.) தங்கப்பதக்ககம் பெற்றவர். கணவர் டாக்டர் காமராஜுடன் இணைந்து குழந்தையின்மை மற்றும் பாலியல்தொடர்பான பிரச்னைகளுக்குச் சிகிச்சையும், ஆலோசனையும் வழங்கிவருகிறார். சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் செக்ஸுவல் மெடிசின் என்ற அமைப்பின் இயக்குநராக உள்ளார்.

You may also like

Recently viewed