Title(Eng) | Ungal Maamiyarai Samaalippathu Eppadi |
---|---|
Author | |
Year Published | 2007 |
Format | Paperback |
Imprint |
உங்கள் மாமியாரை சமாளிப்பது எப்படி
கிழக்கு₹ 100.00
Out of stock
அடிப்படையில் எல்லாப் பெண்களுமே அன்பானவர்கள்தாம். மாமியாராகும் வரை. ஏன் இந்த விசித்திர முரண்?’கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கம்மா.’புகுந்த வீடு செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளது அம்மா தவறாமல் சொல்லும் அறிவுரை இது. அறிவுரை என்னவோ ஒற்றை வரிதான். ஆனால், அந்த ஒற்றை வரிக்குள் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்.என் மகனை முந்தானைக்குள் முடிந்துகொண்டுவிட்டால்? வீட்டுக் கொத்துச் சாவியை தன் இடுப்பில் சொருகிக்கொண்டுவிட்டால்? என் சமையலறையை, என் வீட்டை கைப்பற்றிக்கொண்டால்? எனக்கு மரியாதை கொடுக்காமல் நடத்திவிட்டால்? இதுபோல் இன்னும் பல பயங்கள் மாமியார்களுக்கு. விளைவு? ஊருக்கெல்லாம் நல்ல பெண்மணியாக இருக்கும் அவர், மருமகள் விஷயத்தில் மட்டும் வில்லியாகிவிடுகிறார்.நம்மைப் போன்ற சாதாரணப் பெண்கள் மட்டுமல்ல; இங்கிலாந்து இளவரசி டயானா முதல் இந்திரா காந்தியின் மருமகள் மேனகா காந்தி வரை மாமியார் கொடுமையில் சிக்காதவர்களே கிடையாது. என்ன செய்வது? மாமியாரை மட்டும் டைவர்ஸ் செய்ய நமது சட்டத்தில் இடம் இல்லை!மாமியாரை மந்திரம் போட்டுத் திருத்த முடியாது. கொஞ்சம் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தினால் போதும். உருட்டிச் சுருட்டி கைக்குட்டைக்குள் அடக்கிக்கொண்டுவிட முடியும். நித்தம் தொல்லை தரும் ஜந்துவாகவே இருக்கும் அத்தையை உற்ற தோழியாகவே உருமாற்றிவிட முடியும். எப்படி?இந்த ஆச்சர்யமான புத்தகத்தைப் படியுங்கள்.எல்லாம் சாத்தியமாகும்.