Title(Eng) | Andrew Grove – Chippukkul Muthu |
---|---|
Author | |
Pages | 143 |
Year Published | 2007 |
Format | Paperback |
Imprint |
ஆண்ட்ரூ க்ரோவ்
கிழக்கு₹ 70.00
Out of stock
கம்ப்யூட்டர் உலகில் பில் கேட்ஸுக்கு நிகராக பிரமிப்புடன் உச்சரிக்கப்படுகிற இன்னொரு பெயர் ஆண்ட்ரூ க்ரோவ். உலகம் முழுதும் உபயோகிக்கப்படும் அத்தனை கம்ப்யூட்டர்களுக்குள்ளும் இருக்கும் Intel சிப் தெரியுமல்லவா? அந்நிறுவனத்தின் முதுகெலும்பு.ஆன்ட்ரூவின் பூர்வீகம் ஹங்கேரி. ஆனால் அவர் வளர்ந்து, வாழ்ந்து, சாதித்த இடம் அமெரிக்கா. சொன்னால் நம்புவீர்களா? ஓர் அகதியாக அமெரிக்காவுக்கு ஓடிவந்தவர் அவர்! கடும் உழைப்பினாலும் புத்திக்கூர்மையினாலும் அவர் கட்டிய கோட்டை ஒரு எட்டணா நாணயத்தைவிடச் சிறிதுதான். ஆனால் எட்டாத உயரத்துக்கு அவரைத் தூக்கிச் சென்று உட்காரவைத்தது! அதுதான் Chip!.பர்சனல் கம்ப்யூட்டர்களின் பயன்பாடு அதிகரித்தபிறகு அதன் லாபத்தை முழுமையாகஅறுவடை செய்த நிறுவனம் Intel. தொடக்கத்தில் கம்ப்யூட்டருக்குத் தேவையான மெமரி டிவைஸ்களை மட்டுமே தயாரித்து வந்த இன்டெல் நிறுவனத்தை Chip தயாரிக்கும்படி வற்புறுத்தியவர் ஆன்ட்ருதான். அப்போது அவர் அந்நிறுவனத்தில் ஓர் ஊழியர் மட்டுமே. சிப் உற்பத்திதான் ஓடும் குதிரை. அதில் பயணிப்பது மட்டுமே லாபகரமானது என்று அவர் முடிவெடுத்தார். இந்த முடிவு இன்டெலை எத்தனை உயரத்துக்குக் கொண்டுபோய் நிறுத்தும் என்று அப்போது யாரும் எண்ணவில்லை.ஆன்ட்ரூவின் கணிப்பு நூறு சதவிகித சத்தியம் எனக் காலம் நிரூபித்தது. ஆன்ட்ரூ இன்டெலின்தலைவரானார். “சிப்’ உலகில் ஆண்ட்ரூ க்ரோவ் சந்தேகமில்லாமல் ஒரு தாதா. மாபெரும் நிர்வாகி. மிகப்பெரிய அறிவுஜிவி.வாழ்க்கையைப் படித்துப் பாருங்கள்! சாதிக்கும் வெறி நரம்பெல்லாம் புடைக்கச் செய்துவிடும்.