தேவன் அரோரா

நினைத்தேன்,ஜெயித்தேன்

கிழக்கு

 100.00

Out of stock

SKU: 9788183685801_ Category:
Title(Eng)

Ninaithen , Jeyithen

Author

Pages

168

Year Published

2007

Format

Paperback

Imprint

அவருக்கு ஒரு கனவு இருந்தது. ஜப்பான் சென்று தொழில் கல்வி பயிலவேண்டும். சாத்தியமே இல்லை என்று தேவன் அரோராவின் உள்ளங்கையில் அடித்து சத்தியம் செய்ய ஆயிரம் பேர் காத்திருந்தார்கள். ஆகட்டும் பார்க்கலாம் என்று ஆரம்பித்தார் தேவன் அரோரா. ஆரம்பிக்கும்போதே அவருக்குத் தெரிந்துவிட்டது. இது ஒரு யுத்தம்.ஆயிரம் கடிதப் பரிமாற்றங்கள். திறந்திருந்த எல்லா கதவுகளையும் தட்டினார் அரோரா. திறக்காத கதவுகளை தட்டவில்லை அவர். தனியாகப் பெயர்த்து எடுத்தார்.ஒரு பயிற்சியாளராக ஜப்பானில் வாழ்க்கையைத் தொடங்கினார். விடாமுயற்சி, அறிவுக்கூர்மை, அர்ப்பணிப்பு போன்ற திறமைகளால் உலகப்புகழ் பெற்ற ஜிஇ நிறுவனத்துக்குள் காலடி எடுத்துவைத்தார்.27 வருட ஜிஇ வாசம். பல பன்னாட்டு நிறுவனங்களிலும் பணிபுரிந்திருக்கிறார். ஜிஇ நிறுவன சரித்திரத்தில் உயர் பதவியை எட்டிய முதல் இந்தியர் இவர்தான். பொருள்கள் வாங்கும் (Purchase) பிரிவின் முடிசூடா மன்னராகப் போற்றப்பட்டார்.இன்று ‘ஐகான்ஏசியா’ என்கிற நிறுவனத்துக்குச் சொந்தக்காரர். இந்தியப் பொருள்களுக்கான வெளிநாட்டு ஆர்டர்களை ஏற்படுத்தித் தரும் நிறுவனம் அது. பர்சேஸ் மற்றும் சப்ளை பிரிவில் பணியாற்றும் அனைவருக்கும் தேவன் அரோரா ஒரு நடமாடும் கையேடு.