சரும நோய்கள் சங்கடம் முதல் சந்தோஷம் வரை


Author:

Pages: 152

Year: 2008

Price:
Sale priceRs. 170.00

Description

எழுத்து வடிவம் : ஆர். பார்த்தசாரதி மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய தோல் நோய்களின் வகைகள் என்னென்ன?என்னென்ன காரணங்களால் தோல் நோய்கள் ஏற்படுகின்றன?தொழுநோய்ப் படைக்கும், தோலில் ஏற்படும் பிற படைகளுக்கும் என்ன வித்தியாசம்?பொடுகு, பேன் மற்றும் முடிகளில் ஏற்படும் பாதிப்புகளும், தோல் நோய்கள்தானா?ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குத் தோல் நோய்கள் தொற்றக்கூடியவையா?என்பது உள்ளிட்ட, தோல் தொடர்பான அனைத்துவிதமான சந்தேகங்களுக்கும் விடையளிக்கிறது இந்தப் புத்தகம். சாதாரண படைதானே என்று தோலில் ஏற்படும் சிறு மாற்றத்தையும் எளிதில் எடுத்துக்கொள்ளக் கூடாது. அதுவே பிறகு தீர்க்க முடியாத பாதிப்பாக மாறுவதோடு, சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தாகக்கூட முடியலாம் என்று எச்சரிக்கும் இந்தப் புத்தகம், உங்கள் தோலுக்கு ஒரு பாதுகாப்புக் கவசம்.நூலாசிரியர் டாக்டர் ஜெ. பாஸ்கரன், 1981-ம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர். பிறகு டி.டி. படித்து தோல் நோய்க்கான சிறப்பு மருத்துவரானார். குழந்தை நலம், புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு மற்றும் நரம்பியல் துறைகளில் நிபுணத்துவம் உள்ளவர்.

You may also like

Recently viewed