Title(Eng) | Bruce Lee |
---|---|
Author | |
Pages | 152 |
Year Published | 2008 |
Format | Paperback |
Imprint |
ப்ரூஸ் லீ
கிழக்கு₹ 100.00
Out of stock
அவ்வளவாகப் பேசப்படாத டிவி தொடர் அது. ஆனால், மின்னல் கீற்று போல ஒரு சில எபிஸோட்களில் மட்டும் தோன்றி மறைந்த அந்த நட்சத்திரத்தை மட்டும் பார்த்துப் பார்த்துப் பூரித்துப்போனது அமெரிக்கா. எத்தனை வேகம்! எத்தனை துடிதுடிப்பு! ப்ரூஸ் லீயின் திரையுலகப் பிரவேசம் ஒரு கொண்டாட்டமாக மாறிப்போனது. சீறிப் பாயும் அவர் வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல் திணறிப்போனது கேமரா. அன்று தொடங்கிய ப்ரூஸ் லீயின் சகாப்தம் இன்று வரை நீடிக்கிறது. சீன மார்ஷியல் கலைகளில் ஒன்றான குங்ஃபூவை உலகம் முழுக்க கொண்டுசென்றவர் ப்ரூஸ் லீ. ப்ரூஸ் லீ ஒரு புதிர். அவர் வாழ்ந்த வாழ்க்கை மட்டுமல்ல, அவர் மரணமும்கூட. சாகஸங்களுக்குச் சற்றும் குறைவில்லாத ப்ரூஸ் லீயின் முழுமையான வாழ்க்கை வரலாறு இது.