சேவியர்

கிறிஸ்தவம் : ஒரு முழுமையான வரலாறு

கிழக்கு

 100.00

Out of stock

SKU: 9788183688109_ Category:
Title(Eng)

Christhavam : Oru Muzhumayana Varalaru

Author

Pages

216

Year Published

2008

Format

Paperback

Imprint

அன்பு, நேசம் போன்ற மனிதப் பண்புகளை முன்வைத்து கிறிஸ்தவம் முதன் முறையாக அறிமுகமானபோது, மிகக் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. உலகின் மிகப் பழைமையான மதங்களோடும் நம்பிக்கைகளோடும் போரிட வேண்டியிருந்தது.தம்மைப்போல் பிறரை நேசிக்கக் கற்றுக்கொடுத்த இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்டார். அவர் வழிவந்த சீடர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். கிறிஸ்தவத்தைப் பின்பற்ற நினைப்பதேகூட பெரும் குற்றமாகக் கருதப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது.வேறு ஒரு மதமாக இருந்திருந்தால், இந்நேரம் இருந்த சுவடே இல்லாமல் உதிர்ந்து போயிருக்கும். கிறிஸ்தவம் அசரவில்லை. ஒரு காட்டுச்செடியைப்போல் முட்டி மோதி துளிர்த்து வேர்விட ஆரம்பித்தது. இன்று ஒரு பெரும் விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.மதங்களை சமரசமற்ற வரலாற்றுப் பார்வையோடு அணுகி ஆராயும்போது, பல புதிய வெளிச்சங்கள் புலப்படுகின்றன. கிறிஸ்தவ மதப் புத்தகங்கள் முன்வைக்கும் வரலாற்றோடு, பல இடங்களில் இந்தப் புத்தகம் மாறுபடுவதற்கு இதுவும் ஒரு காரணம்.கிறிஸ்தவத்தின் தோற்றம், வளர்ச்சி, பிரிவுகள், தத்துவங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய எளிமையான ஆவணம் இந்நூல்.