டாக்டர் V.S. நடராஜன்

60 வயதுக்குப்பிறகு

நலம்

 100.00

Out of stock

SKU: 9788183688123_ Category:
Title(Eng)

60 Vayadhukku Piragu

Author

Pages

136

Year Published

2008

Format

Paperback

Imprint

வயதானவர்களைக் கடவுளுக்குச் சமானம் என்று சொல்வார்கள். ஆனால், வயதான பலர் பலவிதமான உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.அந்தப் பாதிப்புகளில் இருந்து அவர்களை மீட்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டுள்ளது இந்தப் புத்தகம். அந்த வகையில், முதியோர்களுக்கு ஏற்படக்கூடிய உடல் மற்றும் மனநலப் பாதிப்புகள் என்னென்ன?நோய்கள் வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?முதியோர் நல மருத்துவர் என்பவர் யார்? அவருடைய முக்கியத்துவம் என்ன?வயதான காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஆரோக்கிய உணவு முறை எது?முதியோர் இல்லங்களில் இருக்க வேண்டிய வசதிகள் என்னென்ன?என்பது உள்ளிட்ட, பல அத்தியாவசியமான கேள்விகளுக்கு எளிமையாக விடையளிக்கும் இந்தப் புத்தகம், முதுமையிலும் நல்ல உடல் மற்றும் மனநலத்துடன் வாழ்வதற்கு வழிகாட்டுகிறது.நூலாசிரியர் டாக்டர் வி.எஸ். நடராஜன், முதியோர் மருத்துவச் சேவைக்காக பெருமை வாய்ந்த டாக்டர் பி.சி. ராய் தேசிய விருதைப் பெற்றவர். 1978-ல் சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் முதியோர் நலப் பிரிவைத் தொடங்கியவர், முதியோர் மருத்துவத்தின் முக்கியத்துவத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர், முதியோருக்கு அவர்களுடைய வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் திட்டத்தைத் தொடங்கியவர் என, முதியோர் மருத்துவம் தொடர்பான பல முதல் முயற்சிகளை மேற்-கொண்ட சாதனையாளர்.