S. சந்திரமௌலி

மேஜிக் கே. லால் மந்திரப் புன்னகை

கிழக்கு

 60.00

Out of stock

SKU: 9788183688437_ Category:
Title(Eng)

Mandhira Punnagai: Magic Lal

Author

Pages

128

Year Published

2008

Format

Paperback

Imprint

‘கே. லால்.’ இந்தப் பெயரையேகூட ஒரு மந்திரத்தைப் போலத்தான் உச்சரிப்பார்கள் ரசிகர்கள். அத்தனை வசீகரம் அந்தப் பெயரில் இருந்தது. அதற்கு என்ன காரணம்? ஒரு மேடையில் யானையை ஏற்றுவதே கடினமான காரியம். லால், யானையை ஏற்றி, அதைக் காணாமலும் போக வைத்துவிடுவார்.ஒரு காலத்தில், மேஜிக்கில் எதுவெல்லாம் சாத்தியமில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தார்களோ, அதையெல்லாம் சாத்தியமாக்கியவர் லால். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியிலிருந்து இடி அமீன் வரைக்கும் அவருக்கு நிறைய ரசிகர்கள். லாலை ‘கடவுள்’ என்றவர்களும் உண்டு. ‘சூனியக்காரன்’ என்றவர்களும் உண்டு. அவருடைய மேஜிக்கைப் பார்த்து பரவசப்பட்டவர்-களும் உண்டு. பொறாமைக்கு ஆளானவர்களும் உண்டு. ‘கரணம் தப்பினால் மரணம்’ என்பது சர்க்கஸ் கலைஞர்களுக்கு மட்டுமல்ல. மேஜிக் கலைஞர்களுக்கும் பொருந்தும். ஒரு நூலிழை வித்தியாசத்தில், கொலைக்குற்றத்துக்கு ஆளாகாமல் தப்பித்தவர் லால். அந்த சம்பவம் நடந்ததும் அவருடைய மேஜிக் நிகழ்ச்சியில்தான். திரைக்குப் பின்னால் நடந்த லாலின் விறுவிறுப்பான நிஜ மேஜிக் அவரது வாழ்க்கை.