Title(Eng) | George Washington |
---|---|
Author | |
Pages | 128 |
Year Published | 2008 |
Format | Paperback |
Imprint |
ஜார்ஜ் வாஷிங்டன்
கிழக்கு₹ 70.00
Out of stock
அமெரிக்காவின் முதல் அதிபர் என்பதற்காக மட்டுமல்ல; அமெரிக்க வரலாற்றை உருவாக்கியவர்களில் முதன்மையானவர் என்பதற்காகவும் வாஷிங்டனை நாம் அறிந்து கொள்ளவேண்டியது அவசியம். அமெரிக்காவின் அரசியல் சரித்திரம் வாஷிங்டனிடம் இருந்துதான் ஆரம்பிக்கிறது.அமெரிக்கப் படைப்பிரிவின் மேஜராக வாஷிங்டன் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் வயது பத்தொன்பது மட்டுமே. அடுத்தக் கட்டமாக, அமெரிக்க புரட்சிகர ராணுவத்தின் முதன்மை கமாண்டராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரிய பதவிதான் என்றாலும் சொல்லிக்கொள்ளும் பலத்தில் இல்லை அப்போதைய ராணுவம். பூஞ்சையாக இருந்த படைப்பிரிவைக் கொண்டு மாபெரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தோடு மோதவேண்டும்.முடியுமா என்று யோசிக்கவில்லை வாஷிங்டன். வா கிளம்பலாம் என்று படைகளை வழிநடத்திச் சென்று மோதினார். அமெரிக்காவின் முதல் சுதந்தரப் போர் இதுவே. அமெரிக்கா சந்தித்த முதல் பெரும் வெற்றியும் இதுவே.மினுமினுக்கும் வல்லரசு தேசமாக அமெரிக்கா இன்று அறியப்படுவதற்கான வலுவான அடித்தளத்தை ஏற்படுத்திய ஜார்ஜ் வாஷிங்டனின் பிரமிப்பூட்டும் சரித்திரம்.இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்:Hari Moorthy – 08-09-09