மருதன்

மால்கம் எக்ஸ்

கிழக்கு

 155.00

Out of stock

SKU: 9788183688666_ Category:
Title(Eng)

Malcolm X

Author

Pages

176

Year Published

2008

Format

Paperback

Imprint

திருடியிருக்கிறார். காலணிகளுக்கு பாலீஷ் போட்டிருக்கிறார். தெருமுனையில் நின்று கஞ்சா விற்றிருக்கிறார். வீடு புகுந்து கொள்ளையடித்திருக்கிறார். துப்பாக்கிக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்திருக்கிறார். எதுவும் செய்யலாம். தவறில்லை. இதுதான் மால்கமின் ஆரம்ப காலக் கொள்கை.சுயலாபத்துக்காகச் செய்ததை ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களின் உரிமைக்காக மாற்றியபோது, மால்கம் எக்ஸ் ஒரு ஹீரோவானார். தலைவர் ஆனார். கோடிக்கணக்கான கறுப்பின மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் ஆனார்.மார்ட்டின் லூதர் கிங் சாத்வீகமாகப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் தன் முஷ்டியையும் குரலையும் உயர்த்தி வெள்ளையர்களுக்கு எதிராக ஆவேசத்துடன் போர்ப் பிரகடனம் செய்தார் மால்கம். அமெரிக்காவை உலுக்கிய மிக உக்கிரமான பிரகடனம் அது.மால்கம் நிகழ்த்திய தொடர் யுத்தம் வெள்ளையர்களைக் கிலி கொள்ளச் செய்தது. ஆயிரக்கணக்கான பக்கங்களை மால்கமுக்காக ஒதுக்கி குற்றச்சாட்டுப் பதிவு செய்தது அமெரிக்க உளவுத்துறை. தவிரவும், பகிரங்கமாகப் பல கொலை மிரட்டல்கள்.‘எச்சரிக்கையுடன் இருங்கள்’ என்று அறிவுரை சொல்லப்பட்டபோது, கத்தியின் வீச்சுபோல் இருந்தது மால்கமின் முழக்கம்.‘ஒரு பெருச்சாளியைப்போல் கட்டிலுக்கு அடியில் நூறு ஆண்டுகள் பதுங்கிக் கிடப்பதற்குப் பதிலாக, சிறுத்தையைப்போல் ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் பாய்ந்து வாழ்ந்து உயிரைக் கொடுப்பேன்’.இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்:உளவியல் – 22.07.2009