Title(Eng) | Down Syndrome |
---|---|
Author | |
Pages | 144 |
Year Published | 2008 |
Format | Paperback |
Imprint |
டெளன் சிண்ட்ரோம் குறையொன்றுமில்லை
நலம்₹ 70.00
Out of stock
டௌன் சின்ட்ரோம் குறைபாடு என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?குழந்தைகளுக்கு உடல் ரீதியாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்னென்ன?டௌன் சின்ட்ரோம் குழந்தைகளை அணுகுவது எப்படி?குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சைகள் மற்றும் பயிற்சிகள் என்னென்ன?-இவை போன்ற, மன வளர்ச்சியையும், உடல் வளர்ச்சியையும் பாதிக்கும் டௌன் சின்ட்ரோம் குறைபாடு பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்துத் தகவல்களும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன. டௌன் சின்ட்ரோம் உள்பட, மன வளர்ச்சி முழுமை அடையாத குழந்தைகள் மீது கூடுதலான அன்பும், அக்கறையும் எடுத்துக்கொண்டால், அவர்களாலும் இயல்பான வாழ்க்கை வாழமுடியும் என அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிறது இந்தப் புத்தகம்.நூலாசிரியர் டாக்டர் ரேகா ராமச்சந்திரன், டௌன் சின்ட்ரோம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் ‘மாத்ரு மந்திர்’ என்ற மையத்தை நடத்தி வருகிறார். தமிழ்நாடு டௌன் சின்ட்ரோம் அமைப்பின் தலைவராக உள்ள இவர், இந்தக் குறைபாடு குறித்து ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். மேலும், இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள இவருக்கு, 1998-ம் ஆண்டில் ‘சிறந்த பெண்மணி’ விருது வழங்கப்பட்டது.இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள் :உரத்த சிந்தனை – 24.12.2008