என். சொக்கன்

கோக் : ஜிவ்வென்று ஒரு ஜில் வரலாறு

கிழக்கு

 75.00

Out of stock

SKU: 9788183689304_ Category:
Title(Eng)

Coke : Jivvendru Oru Jil Varalaru

Author

Pages

160

Year Published

2008

Format

Paperback

Imprint

உலக மக்களின் உற்சாக பானமாக இருக்கும் கோக கோலா, முதன் முதலில் தலைவலிக்கான மருந்தாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா?எத்தனையோ உற்சாக பானங்கள் இருந்தாலும் “கோக கோலா” தனி சாம்ராஜ்யம். தனக்காக தனி ஒரு கோட்டையைக் கட்டிக்கொண்டு வாழும் அதன் கொடியை இறக்க இன்றுவரை எந்த சக்தியாலும் முடியவில்லை.கோக கோலா என்ற பானத்தைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று முதன் முதலில் நினைத்தது யார்? ஆரம்பத்திலேயே அது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த பானம் இன்று உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் வியாபித்திருப்பது எப்படி?”கோக கோலா ஓர் உயிர்கொல்லி பானம்” என்று அவ்வப்போது எழும் சச்சரவுகளை அந்த நிறுவனம் எப்படி எதிர்கொண்டது? கோக கோலாவுக்கு இணையாகப் பேசப்படும் பெப்ஸியின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் கோக கோலா எப்படி பதில் காய் நகர்த்தியது?வளரத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் “கோக கோலா” உற்சாகமளிக்கிற பானம் மட்டுமல்ல, பாடம்.