தேவன்

ஜஸ்டிஸ் ஜகந்நாதன்

கிழக்கு

 495.00

Out of stock

SKU: 9788183689366_ Category:
Title(Eng)

Justice Jaganadhan

Author

Pages

552

Year Published

2008

Format

Paperback

Imprint

தலைமுறை தலைமுறையாகத் தமிழ் வாசகர்களை மகிழ்வித்து வந்ததேவனின் அனைத்து படைப்புகளையும் செம்பதிப்பாகக் கொண்டுவரும்கிழக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்நூல் வெளியாகிறது. அரை நூற்றாண்டைக் கடந்து, இன்றும் மேலும் மேலும் படிக்கத் தூண்டுபவையாக இருக்கின்றன தேவனின் படைப்புகள். எழுத்தில் தேவன் கையாளாத உத்திகளே இல்லை எனலாம். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என ஒவ்வொன்றும் ஒரு விதம். தேவனின் நாவல்கள் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் தொடராக வெளி-யான காலகட்டத்தில், ‘துப்பறியும் சாம்பு’, ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ‘ஸ்ரீமான் சுதர்சனம்’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘சி.ஐ.டி. சந்துரு’, ‘கோமதியின் காதலன்’, ‘கல்யாணி’, ‘மிஸ் ஜானகி’ ஆகியவற்றுக்காக, குடும்பத்துக்குள் நிகழ்ந்த சண்டைகளை அக்கால வாசகர்களால் மறக்க முடியாது. இப்பொழுது இந்தப் புத்தகத்துக்காக அவர்களுடன் அவர்களது குழந்தைகளும் மல்லுக்கு நிற்கப் போகிறார்கள். காலத்தால் அழியாத தேவனின் எழுத்துகளுக்கு வாசகர்கள் பரம்பரையாகத் தொடர்வதில் ஆச்சரியமில்லை. தேவன் நாவல்களில் ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’ ஒரு புதுமையான படைப்பு. முழுக்க முழுக்க, ஒரு கொலை வழக்கில் நீதிமன்றத்தில் நடைபெறும் குறுக்கு விசாரணை மூலமே உருவாக்கப்பட்ட வித்தியாசமான நாவல். விறுவிறுப்பான வழக்கறிஞர்களின் வாதப் பிரதிவாதங்-களும் மெலிதான நகைச்சுவையும் இழையோடும் மர்ம நாவல் இது.‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’ ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு,மகத்தான வரவேற்பைப் பெற்றது.